Archives: செப்டம்பர் 2021

உங்கள் வேலியை நகர்த்தவும்

அந்த கிராம பாதிரியாரால் தூங்க முடியவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது, அவர் அமெரிக்க ராணுவத்தினரின் ஒரு சிறிய குழுவிடம், இறந்துபோன வீரரர்களை தங்களுடைய ஆலயத்திற்கு அருகாமையில் வேலியிடப்பட்ட கல்லறையில் புதைக்க முடியாது என்று கூறியிருந்தார். ஆலயத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே அங்கு புதைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனால் ராணுவத்தினர் இறந்துபோன தங்கள் நண்பர்களை வேலிக்கு வெளியே புதைத்தனர். 

இருந்தாலும், அடுத்த நாள் காலையில் இராணுவத்தினர் தாங்கள் புதைத்த கல்லறையைக் காணமுடியவில்லை. ஒரு வீரன் பாதிரியாரிடம் “என்ன ஆனது கல்லறை காணாமல் போய்விட்டது” என்று கேட்டான். “ஓ அது இன்னும் அங்கே தான் இருக்கிறது” என்று பாதிரியார் கூறினார். ராணுவ வீரனுக்கு குழப்பமாக இருந்தது. அப்பொழுது பாதிரியார் “நேற்று உங்களுக்கு இங்கு இடமில்லை என்று சொன்னது எனக்கு வருத்தமாக இருந்தது. அதனால் இரவு எழுந்து வேலியை நகர்த்திவிட்டேன்” என்று விளக்கமளித்தார். 

நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களுக்கு தேவன் புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கமுடியும். நாம் அதைத் தேடினால், ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு ஏசாயா தீர்க்கதரிசி கொடுத்த செய்தி இதுதான். அவர்கள் செங்கடலைக் கடந்ததை ஆவலோடு திரும்பிப் பார்ப்பதற்கு பதிலாக, தேவன் செய்யும் புதிய அற்புதங்களுக்கும், காட்டும் புதிய வழிகளுக்கும் தங்கள் பார்வையைத் திருப்ப வேண்டியிருந்தது. “முந்தினவைகளை நினைக்க வேண்டாம்.” இதோ நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்” (ஏசாயா 43:18-19) என்று சொல்லி தேவன் அவர்களை உற்சாகப்படுத்தினார். சந்தேகங்கள் மற்றும் யுத்தங்களின் மத்தியிலும் அவரே நம்முடைய நம்பிக்கையின் ஆதாரமாயிருக்கிறார். “நான் தெரிந்துக்கொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்தில் தண்ணீர்களையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும்… உண்டாக்குவேன்.” (வச. 20).

புதுப்பிக்கப்பட்ட கண்ணோட்டத்துடன், நாமும் தேவன் நம்முடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் புதிய திசைகளைப் பார்க்க முடியும். புதிய கண்களுடன் அவருடைய புதிய வழிகளைப் பார்ப்போம். பின்பு, தைரியத்துடன், புதியப் பாதையில் நாம் அடியெடுத்து, தைரியமாக அவரைப் பின்பற்றுவோம்.

குழப்பத்திலிருந்து ஒரு நற்செய்தி

டேரில் ஒரு பிரபலமான பேஸ்பால் விளையாட்டு வீரர். அவர் போதைப் பொருட்களால் தன்னுடைய வாழ்க்கையை அழித்தார். ஆனால் இயேசு அவரை விடுதலையாக்கி, அவர் பல ஆண்டுகளாக தூய்மையானவராய் இருக்கிறார். இன்றைக்கு அவர் இப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருக்கும் பலருக்கு உதவிசெய்து அவர்களை விசுவாசத்திற்குள் நடத்துகிறார். தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, தனது குழப்பத்திலிருந்து தேவன் தன்னை ஒரு செய்தியாக மாற்றியதை உறுதி செய்கிறார். 

தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. கலிலேயாக் கடலில் புயலடித்த ஒரு இரவுக்குப் பின், இயேசு தன்னுடைய சீஷர்களுடன் கடற்கரை அருகிலுள்ள கல்லறையினிடத்திற்கு வந்தபோது, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு எதிர்கொண்டான். இயேசு அவனுக்குள் இருந்த பிசாசுகளிடம் பேசி, அவைகளைத் துரத்திவிட்டு, அவனை விடுதலையாக்கினார். இயேசு அவ்விடம் விட்டுப் பறப்படும்போது, தான் அவரோடே கூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். ஆனால் இயேசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை - ஏனென்றால் அவருக்காக அவன் செய்யவேண்டிய வேலை இருந்தது. “நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப் போய் கர்த்தர் உனக்கு செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி” (மாற்கு 5:19) என்று சொன்னார். 

மீண்டும் அந்த மனிதனைப் பற்றி ஒன்றும் எழுதப்படவில்லை. அனால் அவனைப் பற்றி புதிரான சிலவற்றை வேதாகமம் காட்டுகிறது. அந்தப் பகுதியில் இருந்த மனிதர்கள் இயேசுவை தங்கள் எல்லையை விட்டுப் போகும்படி பயத்தோடே வேண்டிக்கொண்டார்கள் (வச. 17). ஆனால் மீண்டும் அவர் அந்த இடத்திற்கு வந்தபோது திரளான ஜனங்கள் கூடிவந்தார்கள் (8:1). அந்த மனிதனை தேவன் அனுப்பினதால் இந்த திரள்கூட்ட மக்கள் வந்திருப்பார்களோ?

ஒரு காலத்தில் இருளின் ஆதிக்கத்தில் இருந்தவர், முதல் ஊழியக்காரரர்களில் ஒருவராக இருந்தவர், இயேசுவின் இரட்சிக்கும் வல்லமையை திறம்பட தெரிவித்ததினாலோ?

பரலோகத்தின் இந்தப் பகுதியை நாம் ஒருபோதும் அறிய முடியாது. ஆனால் இது மட்டும் தெளிவாயிருக்கிறது. தேவன் அவருடைய ஊழியத்தைச் செய்ய நம்மை விடுவிக்கும்போது, நம்முடைய குழப்பமான கடந்தக் காலத்தை, அன்பு மற்றும் நம்பிக்கையின் செய்தியாக மாற்றமுடியும்.

தேவனால் உருவாக்கப்பட்ட கருவிகள்

இதுவரைக்கும் இல்லாத அளவு, மிகப்பெரிய வீடியோ விளையாட்டு என்று கணிக்கப்பட்ட நின்டென்டோவின் “தி லெஜெண்ட் ஆஃப் செல்டா: ஓக்கரீனா ஆஃப் டைம்ஸ்” உலகம் முழுவதும் ஏழு மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டன. இது உருளைக்கிழங்கைப் போல வடிவத்தில், களிமண்ணினால் செய்யப்பட்ட மிகச்சிறிய, பழங்காலத்து, ஒக்கரீனோ என்னப்பட்ட கருவியை பிரபலப்படுத்தியது. 

ஓக்கரீனா ஒரு இசைக்கருவியைப்போல தோற்றமளிக்காது. ஆனால் அது இசைக்கப்படும்போது, சரியான வடிவமில்லாத அதன் பல்வேறு துளைகளை மூடி, ஊதுகுழல் மூலம் ஊதப்படும்போது, அமைதியான ஆனால் சில நேரங்களில் ஆக்ரோஷமாக நம்பிக்கையூட்டும் ஒலியை உருவாக்குகிறது. 

ஓக்கரினாவைச் செய்தவர் ஒரு பெரிய அளவு களிமண்ணை எடுத்து, அதற்கு அழுத்தத்தையும் வெப்பத்தையும் கொடுத்து, அதை ஒரு அற்புதமான இசைக்கருவியாக மாற்றுகிறார். நான் இந்தப் படத்தில் தேவனையும் நம்மையும் காண்கிறேன். ஏசாயா 64:6, “நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம்…. இப்போதும் கர்த்தாவே நீர் எங்களுடைய பிதா. நாங்கள் களிமண். நீர் எங்களை உருவாக்குகிறவர். நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை… அதிகமாய் கோபம் கொள்ளாமலும்… இருப்பீராக” என்று ஏசாயா 64:6, 8-9ல் ஏசாயா கூறுகிறார். “தேவனே நீரே அதிகாரத்திலுள்ளவர். நாங்கள் எல்லோரும் பாவிகள். எங்களை ஒரு அழகான கருவியாக உமக்காக உருவாக்கும்” என்று தீர்க்கதரிசி கூறினார். 

அதைத்தான் தேவன் செய்கிறார்! அவருடைய கிருபையினால், அவர் தம்முடைய குமாரன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரிக்க அனுப்பி, நாம் பரிசுத்த ஆவியானவரோடு ஒவ்வொரு நாளும் நடக்கும்போது, நம்மை வடிவமைத்து மாற்றுகிறார். எப்படி அழகான இசையை உருவாக்குவதற்கு, ஒக்கரினாவை உருவாக்கினவர் தன்னுடைய சுவாசத்தை அந்தக் கருவிக்குள் ஊதுகிறாரோ, அப்படியே, நாமும் அதிகமதிகமாக இயேசுவைப் போல மாற (ரோமர் 8:29) அவருடைய கரத்தின் கிரியையான நம்மை, தம்முடைய அழகான சித்தத்தை நிறைவேற்ற, தேவனும் நமக்குள் கிரியை செய்கிறார். 

பாளயத்துக்குப் புறம்பே

நான் வளர்ந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை சந்தை நாள். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நான் ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரை நினைவுகூறுகிறேன். ஹேன்சன்ஸ் நோயினால் (தொழுநோய்) விரல்களும், கால்விரல்களும் அரித்து விட்ட நிலையில், அவள் தன்னுடைய பாயின் மீது குனிந்து ஒரு சுரைக்காயைக் கொண்டு தன்னுடைய விளைச்சலை எடுத்துக்கொண்டு இருப்பாள். சிலர் அவளைத் தவிர்த்தனர். அவளிடம் தவறாமல் வாங்குவதை என் தாயார் ஒரு முக்கிய விஷயமாகக் கருதினார். நான் அவளை சந்தை நாட்களில் மட்டும் பார்ப்பேன். பின்னர் அவள் ஊருக்கு வெளியே மறைந்து விடுவாள். 

பழங்கால இஸ்ரவேலர் காலத்தில், தொழுநோய் உள்ளவர்கள் பாளயத்துக்கு புறம்பே வாழ வேண்டும். இது ஒரு கேவலமான வாழ்க்கை. இப்படிப்பட்டவர்களைக் குறித்து “அவர்கள் தனியே குடியிருக்க வேண்டும்” (லேவியராகமம் 13:46) என்று இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட சட்டம் கூறுகிறது. பாளயத்துக்குப் புறம்பே பலியிடப்பட்ட காளைகளின் சடலங்கள் எரிக்கப்பட்டன (4:12). நீங்கள் இருக்கவேண்டிய இடம் பாளயத்துக்குப் புறம்பே அல்ல.

இந்தக் கடினமான உண்மை எபிரெயர் 13ல் இயேசுவைக் குறித்து சொல்லப்படும் கூற்றுக்கு உயிர் கொடுக்கிறது. “ஆகையால் நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் போகக்கடவோம்” (வச. 13) நாம் எபிரெயருடைய பலி செலுத்தும் முறையை ஆராயும்போது, இயேசு நகர வாசலுக்குப் புறம்பே சிலுவையில் அறையப்பட்டது ஒரு முக்கியமான அம்சமாகும். 

நாம் பிரபலமாக இருக்கவும், கௌரவப்படவும், வசதியான வாழ்க்கை வாழவும் விரும்புகிறோம். ஆனால் “பாளயத்துக்குப் புறம்பே” அவமானம் இருக்கும் இடத்திற்குச் செல்ல தேவன் அழைக்கிறார். அங்கு தான் ஹேன்சன்ஸ் நோய் கொண்டிருக்கும் விற்பனையாளர்களை நாம் பார்க்கமுடியும். அங்குதான் உலகத்தால் நிராகரிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடியும். அங்கு தான் இயேசுவையும் சந்திக்க முடியும். 

இழப்பிற்கு பின்பான வாழ்க்கை

"நல்ல துக்கம்!” இதை நீங்கள் யோசித்தால், இது வழக்கமான சொல் அல்ல. நேர்மையாக கேட்டால், நல்ல துக்கம் என்றொன்று உண்டா? ஆம்; துக்கம் மாறும்போது, அது நன்மையே. நம்முடைய இழப்புகளுக்கு நாம் துக்கப்படும் போது நமது ஆத்துமாவிற்கான ஆறுதலை எப்படி கண்டடைய கூடும் என்பதை இழப்புடன் வாழ்வது வெளிப்படுத்துகிறது. பின்வரும் பக்கங்களில், ஆலோசகரும், துக்கப்படுபவருமான டிம் ஜாக்சன், எப்படி வாழ்க்கையின் மனவேதனைகளில் உட்சாய்வது, நம்முடைய சிருஷ்டிகர் மேலும், மற்றவர்கள் மேலும் நாம் சார்ந்திருக்க வழிவகைச் செய்கிறது என்பதை ஆராய நம்மை அழைக்கிறார்.

என் இழப்பின் கோடை…

சாம்பலிலிருந்து

விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும்? எதை விதைத்தாயோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும் என்பதே அறுவடையின் விதிமுறை. முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில், “மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ண வொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்”(கலாத்தியர் 6:7) என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே எண்ணம் யோபு புத்தகத்திலும் பிரதிபலிக்கப்படுகிறது. யோபின் நண்பர்களில் ஒருவர் யோபின் அழிவை நியாயமான தண்டனையாகவே கருதினார். “குற்றம் இல்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப் பாரும். நான்…