சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் குறிப்பிட்ட ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். அங்கிருந்து, ஒழுங்கு விதிமுறைகள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டது. அதில் மதுபானம், புகையிலை, சிலவகையான பொழுதுபோக்கு ஆகியவைகள் தடைசெய்யப்பட்டிருந்தது. “நம்முடைய ஊழியர்களிடமிருந்து இவற்றை எதிர்பார்க்கிறோம்” என்று அதில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அவைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை என்பதினால் அதை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கடினமாய் தெரியவில்லை. ஆனால் என்னுடைய விவாத பார்வையில் ஏன் அந்த தடைசெய்யப்பட்ட பட்டியலில் ஆனவம், உணர்வற்ற தன்மை, முரட்டுத்தனம், ஆவிக்குரிய மாறுபாடு, விமர்சனம் போன்ற காரியங்கள் தடைசெய்யப்படவில்லை என்று எண்ணத்தோன்றியது. 

இயேசுவை பின்பற்றுவதை விதிமுறைப் பட்டியலைக் கொண்டு தீர்மானிக்கமுடியாது. அது அளவிடமுடியாத வாழ்க்கையின் மிக நுட்பமான ஒரு குணாதிசயம். ஆனால் அது “அழகானது” என்று மட்டும் கூறமுடியும். 

மத்தேயு 5:3-10இல் பதிவாகியுள்ள மலைப் பிரசங்கம் அந்த அழகை விவரிக்கிறது. இயேசுவின் ஆவியை உடையவர்கள் தாழ்மையும் வலிமையும் கொண்டவர்கள். மற்றவர்களுடைய உபத்திரவத்தைப் பொருட்படுத்துவார்கள். சாந்தகுணம் மற்றும் இரக்கமுள்ளவர்கள். தங்களால் நன்மையான காரியம் செய்யவும் மற்றவர்களும் பிறருக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்கள், துன்பப்பட்டு தோற்றுப்போனவர்களின் மீது இரக்கம் காட்டுவார்கள். இயேசுவை நேசிப்பதையே பிரதானமாய் வைத்து செயல்படுவர். சமாதானமாயிருப்பார்கள், தன் சமாதானத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வர். தனக்கு தீமைசெய்கிறவர்களிடமும் தயவுகாட்டுவார்கள். அவர்கள் “பாக்கியவான்கள்,” அதாவது, மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று அர்த்தம். 

இந்த வகையான வாழ்க்கைமுறை மற்றவர்களுடைய கவனத்தை ஈர்த்து, அவர்களை இயேசுவை நாடி வரச்செய்கிறது.