கடந்த ஆண்டுகளில் பல எழுத்தாளர்கள், விசுவாசம் என்ற வார்த்தையின் “சொற்பொருளை” புதியதாகப் பார்க்கும்படி விசுவாசிகளை வலியுறுத்தினர். உதாரணமாக ஒரு எழுத்தாளர், இறையியல் ரீதியாக பிரபலமான விசுவாச வார்த்தைகள் கூட சில நேரங்களில் அதிகப்படியான பிரபல்யத்தாலும், பயன்பாட்டினாலும் அதின் நிஜமான சாரம்சத்தை இழக்க நேரிடும்; அதினிமித்தம் சுவிசேஷத்தின் ஆழத்தையும், தேவனுடைய தேவையையும் இழக்கநேரிடும். அவ்வாறு நேரிடும்போது, மீண்டும் நற்செய்தியை முதன்முதலாய் கேட்கும் உணர்வு ஏற்படும் வரை, விசுவாசத்தின் மொழியை “தொடக்கத்திலிருந்து” மீண்டும் கற்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
“புதிதாக தேவனைக் குறித்து பேச” கற்றுக்கொள்வதற்கான இந்த அழைப்பானது, “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்” என்ற பவுல் அப்போஸ்தலரின் அர்ப்பணிப்பை நினைவூட்டுகிறது (1 கொரிந்தியர் 9:22-23). இயேசுவின் செயல்களை தெளிவாய் தொடர்புகொள்ள தனக்கு நன்றாய் தெரியும் என்று அவர் ஒருபோதும் கருதவில்லை. மாறாக, நற்செய்தியை பகிர்ந்துகொள்ள தேவையான சரியான சொற்களை தேவன் தரும்படியாய் இடைவிடாத ஜெபத்தை அவர் சார்ந்திருந்தார். மேலும் சக விசுவாசிகளும் அவருக்காக ஜெபிக்கும்படியாகவும் கேட்டுக்கொண்டார் (எபேசியர் 6:19).
ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய அன்பில் வேரூன்றுவதற்கு ஒவ்வொரு நாளும் தாழ்மையிலும் ஏற்றுக்கொள்ளுகிற மனப்பான்மையிலும் தரித்திருப்பது அவசியம் என்று பவுல் அறிந்திருந்தார் (3:16-17). ஒவ்வொரு நாளும் தேவனின் அன்பில் நாம் வேரூன்றுவதினால், நாம் அவருடைய கிருபையை சார்ந்திருப்பதையும், அவர் நமக்கு செய்த ஆச்சரியமான காரியங்களைப் பகிர்ந்துகொள்ள சரியான சொற்களையும் கண்டுபிடிக்கிறோம்.
சுவிசேஷத்தை புதிதாய் பார்த்த அனுபவம் உங்களுக்கு முதன்முதலில் எப்போது ஏற்பட்டது? உங்கள் வாழ்கையில் தேவனின் கிருபையை சார்ந்துகொள்ளவும், திறந்த இருதயமுள்ளவர்களாய் உங்களை மாற்றவும் ஜெபம் எவ்வாறு உதவ முடியும்?
அன்பின் தேவனே, அடிக்கடி உமது கிருபையையும் நன்மையையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாததற்கு என்னை மன்னியும். உமது கிருபை மற்றும் அன்பின் ஆழங்களை புதிய வழிகளில் தினமும் புரிந்துகொள்ள எனக்கு உதவும். நீங்கள் செய்ததைப் பகிர சரியான சொற்களைக் கண்டுபிடிக்க எனக்கு உதவும்.