பீனட்ஸ் என்ற துண்டு நகைச்சுவை தொடரில், மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம் லூசி ஐந்து சென்ட் பணத்திற்கு “மனநல உதவி” என்று விளம்பரம் செய்தார். ஆழ்ந்த மனச்சோர்விலிருந்த லினஸ் அவளது அலுவலகத்தைத் தேடி கண்டுபிடித்தார். அதிலிருந்து மீளுவதற்கு என்ன வழி என்று அவளிடம் கேட்க, “உடனடியாக ஐந்து சென்டுகள் பணத்தை எடுங்கள்” என்று லூசி விரைந்து பதிலளிக்கிறாள். 

இத்தகைய இலகுவான பொழுதுபோக்கு அப்போதைய தருணத்திற்கு புன்னகையைத் தரும். அதே வேளையில், நிஜ வாழ்க்கையில் நம்மைப் பிடிக்கக்கூடிய சோகமும், இருளும் அவ்வளவு எளிதில் நம்மை விட்டு போவதில்லை. நம்பிக்கையிழக்கும் மனச்சோர்வான உணர்வுகள் முற்றிலும் நிஜமானவைகள். அவைகள் முறைப்படி கவனிக்கப்படவேண்டியவைகள். 

உண்மையான வேதனையை நிவிர்த்தி செய்ய லூசியின் ஆலோசனை உதவாது. இருப்பினும், 88-ஆம் சங்கீதத்தின் ஆசிரியர் நம்பிக்கையளிக்கக்கூடிய ஆலோசனையை கொடுக்கிறார். பிரச்சனைகளை ஒரு லாரியில் கொண்டுவரப்பட்டு அவரது வீட்டு வாசலில் கொட்டப்பட்டது. எனவே, கலங்கமில்லா நேர்மையுடன், அவர் தனது இருதயத்தை தேவனிடம் ஊற்றுகிறார். “என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது” (வச.3). “என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்” (வச.6). இருள் என் நெருங்கிய நண்பனானது (வச.18). சங்கீதக்காரனின் இந்த வலியையும் உணர்வுகளையும் நாம் காணலாம். ஆனாலும், அது முழுமையல்ல; அவரது புலம்பல்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. “என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன். என் விண்ணப்பம் உமது சமூகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்” (வச.1-2; வச.9,13 ஐ காண்க). கடினமான மனச்சோர்வுகள் ஏற்படக்கூடும்; ஆலோசனை மற்றும் மருத்துவ பராமரிப்பு போன்ற நடைமுறை நடவடிக்கைகள் தேவைப்படலாம். ஆனால் தேவன் மீதான நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள்.