சுமார் 2.19 கோடிக்கு, நீங்கள் ஒரு புதிய மெக்லாரன் ஆடம்பர பந்தய கார் வாங்க முடியும். இந்த வாகனம் வி8 எஞ்சினுடன் 710 குதிரைத்திறனுடனும் வருகிறது. உங்கள் காலைப் பணியின் பயணத்திற்கு உங்களுக்குத் தேவையானதை விட இது அதிகம்.

நிச்சயமாக, அதன் அனைது ஆற்றலையும் பயன்படுத்த நீங்கள் ஆசைப்படக்கூடும். ஒரு ஓட்டுநர் தனது கார் மிகவும் “வேகமாக” ஒரு உயர்மட்ட விற்பனை நிலையத்திலிருந்து இருந்து இருபத்தி நான்கு மணி நேரத்தில் பழைய இரும்பு குவியலுக்குச் செல்லக்கூடும் என்பதை கற்றுக்கொண்டார், ! கார் வாங்கிய ஒரே நாளில், அதை ஒரு மரத்தில் மோதினார். (அதிர்ஷ்டவசமாக, அவர் உயிர் தப்பினார்.)

வேதத்தின் மூன்று அதிகாரங்கள் கூறும் சம்பவம் மூலமாக, ஒரு தீமையான தேர்வும் ஒரு மரமும் தேவனின் நல்ல படைப்புக்கு கேடு விளைவித்தது கற்றுக்கொள்கிறோம். ஆதாமும் ஏவாளும்  புசிக்கக்கூடாத விருட்சத்திலிருந்து கனியை புசித்தார்கள் (ஆதியாகமம் 3:11). சம்பவம் இங்கு தான் ஆரம்பமாகிறது, பூமியானது சபிக்கப்பட்டது (வச.. 14-19).

இந்த சாபத்தை நீக்குவதில் மற்றொரு மரம் பங்கு வகிக்கும்- அது இயேசு நம் சார்பாக சகித்த சிலுவை மரம். அவருடைய மரணம் அவருடன் நம் எதிர்காலத்தை சம்பாதித்த்து (உபாகமம் 21:23; கலாத்தியர் 3:13).

வேதத்தின் கடைசி அத்தியாயத்தில் கதை முழுமை பெறுகிறது. “ஜீவவிருட்சம்” “ஜீவத்தண்ணீருள்ள நதிக்கு” அருகில் வளர்ந்து வருவதைப் பற்றி நாம் வாசிக்கிறோம் (வெளிப்படுத்துதல் 22: 1-2). யோவான் விவரிப்பதுபோல், இந்த மரம் “ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவையாக” இருக்கும் (வச.. 2). “இனி ஒரு சாபமுமிராது” (வச.. 3) என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். நாம் அனைவரும் வாஞ்சிக்கிற நித்திய மகிழ்ச்சியுடன் தேவனோடு -எப்போதும் வாழ்வோம் என்பதே சம்பவத்தின் நிறைவு.