இமயமலையின் அடிவாரத்திற்கு அருகில், ஒரு சுற்றுலா பார்வையாளர் சாளரங்கள் இல்லாத வீடுகளின் வரிசையை கவனித்தார். அவரது வழிகாட்டி, சில கிராமவாசிகள் தூங்கும்போது பேய்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்துவிடக்கூடும் என்று அஞ்சினர், எனவே அவர்கள் எதுவும் ஊடுருவமுடியாத சுவர்களைக் கட்டியுள்ளனர் என்று விவரித்தார். அம்மாதிரியான வீட்டின் உரிமையாளர் இயேசுவைப் பின்தொடரத் தொடங்கிவிட்டார் என்றால் நீங்கள் சொல்ல முடியும், ஏனென்றால் அவர் வெளிச்சம் உள்ளே வரும்படியான சாளரத்தை வைத்திருப்பார்.
நாம் அதை அப்படியே நம் வாழ்வில் பார்ப்பதில்லை இருப்பினும் இதேபோன்ற ஒரு சூழ்நிலை நம்மில் நிகழக்கூடும்,. நாம் பயமுறுத்துகிற, இரு முனைக்கும் மத்தியில் உள்ள காலங்களில் வாழ்கிறோம். குடும்பங்களையும் நண்பர்களையும் பிளவுபடுத்தும் கோபத்தை உண்டுபண்ணும் விரிசல்களை சாத்தானும் அவனுடைய பேய்களும் தூண்டுகின்றன. அப்போது நான் அடிக்கடி என் சுவர்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்வது போல் உணர்கிறேன். ஆனால் நான் ஒரு சாளரத்தை வைக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
இஸ்ரேவேலர் உயர்ந்த சுவர்களில் தஞ்சம் புகுந்தனர், ஆனால் தேவனோ அவர்களுடைய பாதுகாப்பு அவரிடத்தில் உள்ளது என்று கூறினார். அவர் வானத்திலிருந்து ஆளுகை செய்கிறார், அவருடைய வார்த்தை அனைத்தையும் ஆளுகிறது (ஏசாயா 55: 10–11). இஸ்ரேவேல் அவரிடத்தில் திரும்பி வந்தால், தேவன் “அவர்கள் மேல் மனதுருகுவார்” (வச.. 7) மற்றும் உலகை ஆசீர்வதிப்பதற்காக அவர்களை தம்முடைய மக்களாக மீட்டெடுப்பார் (ஆதியாகமம் 12: 1–3). அவர் அவர்களை உயர்த்துவார், இறுதியில் அவர்களை வெற்றிகரமான அணிவகுப்பில் வழிநடத்துவார். அவர்களின் கொண்டாட்டம் “அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்” (ஏசாயா 55:13).
சில நேரங்களில் சுவர்கள் அவசியம். சாளரங்கள் கொண்ட சுவர்கள் மிகச் சிறந்தவை. நம் எதிர்காலத்திற்காக நாம் தேவனை நம்புகிறோம் என்பதை அவை உலகுக்குக் காட்டுகின்றன. நம் அச்சங்கள் உண்மையானவை. நம் தேவன் பெரியவர். சாளரங்கள் நம்மை இயேசுவுக்கு நேராய் – “உலகின் ஒளி”க்கு நேராய் (யோவான் 8:12) – மேலும் அவரின் தேவை உள்ள மற்றவர்களுக்கு நேராய் திறக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் அதிக சுவர்களா அல்லது சாளரங்களா? ஏன்? நீங்கள் இன்னும் வெளிப்படையாய் இருக்க வேண்டிய ஒரு நபர் அல்லது சூழ்நிலை இருக்கிறதா? ஆகியவற்றை கூற முடியுமா?
சர்வவல்லமையுள்ள பிதாவே, உம்முடைய அன்பின் நம்பிக்கையால் என் இருதயத்தை வெள்ளம் போல் நிரப்பும்.