ஒரு புதிய சமூக மையத்தின் கீழ் தளத்தில் ஒரு நூலகத்தை நான் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, மேலிருந்து ஒரு சப்தம் திடீரென அந்த அறையை அதிரச் செய்தது. சில நிமிடங்கள் கழித்து அது மீண்டும் நடந்தது,. இறுதியில் எரிச்சலடைந்த ஒரு நூலகர், நூலகத்திற்கு நேராக மேல் பகுதியில் ஒரு பளு தூக்கும் பகுதி அமைக்கப்பட்டிருப்பதாக விளக்கினார், ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் எடையைக் கீழே வைக்கும் போதெல்லாம் சத்தம் ஏற்பட்டது. கட்டிடக் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் இந்த அதிநவீன வசதியின் பல அம்சங்களை கவனமாக திட்டமிட்டிருந்தனர், எனினும் யாரோ ஒருவர் நூலகத்தை இந்த செயல்பாடுகள் உள்ள இடத்திலிருந்து வேறு இடதிற்கு மாற்ற மறந்துவிட்டார்.
வாழ்க்கையிலும், நமது திட்டங்கள் பெரும்பாலும் குறைபாடுள்ளதாக இருக்கிறது. முக்கியமான கருத்தாய்வுகளை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். நம் திட்டங்கள் விபத்துகளும் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளிலும் எப்போதும் கைகொடுப்பதில்லை. நிதி குறைபாடுகள், நேர நெருக்கடிகள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் ஆகியவற்றைத் தவிர்க்க திட்டமிடுவது நமக்கு உதவுகிறது என்றாலும், மிக சிறப்பான உத்திகள் கூட நம் வாழ்க்கையிலிருந்து எல்லா பிரச்சனைளையும் அகற்ற முடியாது. நாம் ஏதேனுக்குப் பிந்தைய உலகில் வாழ்கிறோம்.
தேவனின் உதவியுடன், எதிர்காலத்தை விவேகத்துடன் எதிர் கொள்வதற்கும் (நீதிமொழிகள் 6: 6–8) சிரமங்களை கையாள்வதற்கும் இடையே உள்ள சமநிலையையும் நாம் காணலாம். பெரும்பாலும் தேவன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கும் கஷ்டங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. நம்மிடம் பொறுமையை வளர்க்கவோ, நம்முடைய விசுவாசம் பெருகவோ அல்லது நம்மை அவரண்டையில் நெருங்கி சேரவும் அதை அனுமதிக்கலாம். வேதம் நமக்கு நினைவூட்டுகிறது, “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.” (நீதிமொழிகள் 19:21). நம்முடைய இலக்குகளையும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் நாம் இயேசுவிடம் அர்ப்பணிக்கும்போது, நம்மிடத்திலும், நம் மூலமாகவும் என்ன செய்து முடிக்க விரும்புவதை அவர் நமக்குக் காண்பிப்பார்.
உங்கள் திட்டங்கள் செயல்படாதபோது அல்லது உங்கள் எதிர்பார்ப்புகள் சந்திக்கப்படாதபோது நீங்கள் எவ்வாறு நடந்திகொள்வீர்கள்? அந்த அனுபவங்களின் மூலம் நீங்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பக் கூடும்?
தேவனே, நீங்கள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறீர் என்று நான் நம்புகிறேன். என்னுடைய எல்லா திட்டங்களையும் உங்களிடம் அர்ப்பணித்து, இந்த உலகில் ஞானத்தோடு வாழ எனக்கு உதவும்.