பெரும்பாலான சமோவா இளைஞர்கள் (ஒரு ஆஸ்திரேலிய கடலோர தீவு) அவர்களின் மக்களுக்கும் மற்றும் அவர்களது தலைமைக்கும் தங்கள் செய்ய வேண்டிய பொறுப்பை அடையாளங்களாக பச்சையாககுத்தியிறுப்பார்கள். இயற்கையாகவே, இந்த அடையாளங்கள் சமோவான் ஆண்கள் ரக்பி அணி உறுப்பினர்களின் கைகளில் இடம்பெற்றிருக்கும். பச்சை குத்தல்கள் என்றாலே எதிர்மறையான அர்த்தங்களைக் கொடுக்கும் நாடான ஜப்பானுக்குப் பயணம் செய்தபோது, குழு உறுப்பினர்கள் தங்கள் பச்சை குத்தல்கள் தங்களை அழைத்தவர்களுக்கு ஒரு சிக்கலை வழங்கியதை உணர்ந்தனர். நட்பின் வெளிப்பாடாக, சமோவான் அணியினர் தங்கள் பச்சை குத்தியதை மறைக்க வடிவமைப்புகளை உள்ளடக்கிய தோல் நிற உறைகளை அணிந்தனர். “ஜப்பானியரின் எண்ணங்களுக்கு நாங்கள் மரியாதைக்குரியவர்களாகவும் மற்றும் கவனத்துடனும் இருக்கிறோம்….ஜப்பானிய வழியில்” என்று அணியின் தலைவர் விளக்கினார். “நாங்கள் பச்சையை காண்பிப்பது சரி என்ற நிலையை நாங்கள் உறுதி செய்வோம்.”
தனிமனித கருத்துக்களை முக்கியப்படுத்தும் ஒரு யுகத்தில், சுய வரம்பை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது—ரோமருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் கூறிய கருத்து. சில சமயங்களில் அன்பினால் மற்றவர்களுக்காக நம் உரிமைகளை விட்டுக்கொடுப்பது அவசியமாகிறது என்று அவர் எங்களிடம் கூறினார். நம்முடைய சுதந்திரத்தை எல்லைக்கே தள்ளுவதற்குப் பதிலாக, சில சமயங்களில் அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது. பவுல் அப்போஸ்தலன் தேவாலயத்தில் சிலர் “எந்த பதார்த்தத்தையும் சாப்பிட” சுதந்திரம் இருப்பதாக நம்பினார்கள், ஆனால் மற்றவர்கள் “மரக்கறிகளை மட்டுமே” சாப்பிட்டார்கள் (ரோமர் 14: 2) என்பதை விளக்கினார். இது ஒரு சிறிய பிரச்சினை போல் தோன்றினாலும், முதல் நூற்றாண்டில், பழைய ஏற்பாட்டின் உணவுமுறை சட்டங்களை பின்பற்றுவது சர்ச்சைக்குரியதாக இருந்தது. சுதந்திரமாக சாப்பிட்டவர்களை குறிப்பிட்ட வார்த்தைகளால் தீர்மானிப்பதற்கு முன், “நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக” என்று பவுல் அனைவருக்கும் அறிவுறுத்தினார் (வச. 13). “மாம்சம் புசிக்கிறதும் மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.” (வச. 21).
சில நேரங்களில், இன்னொருவரை நேசிப்பது என்பது நமது சொந்த சுதந்திரங்களை கட்டுப்படுத்துவதாகும். நமக்கு முழு சுதந்திரம் உள்ளதாலேயே அனைத்தையும் எப்போதும் செய்யலாம் என்றில்லை. சில நேரங்களில் அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது.
இயேசுவின் விசுவாசிகளுக்காக மக்கள் தங்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்? அது எப்படி இருந்தது? அன்பு நம்மை கட்டுப்படுத்துகிற அந்த சூழ்நிலைகளில் எது கடினமாக தோன்றுகிறது?
தேவனே, நான் உம்மை இன்னும் அதிகமாக நேசிக்க விரும்புகிறேன். எந்த இடத்தில் மற்றவர்களை அவர்களுடைய சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்—மற்றும் எனது சொந்த சுதந்திரத்தை நான் எங்கே – எப்போது - எவ்வாறு கட்டுபாட்டுடன் பயன்படுத் வேண்டும் என்பதை காண்பதற்கு உதவும்.