வயதுவந்தோருக்கான வளர்ச்சி பற்றிய ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஆய்வு என்பது பல பத்தாண்டுகள் நீடித்த திட்டமாகும், இதன் விளைவாக ஆரோக்கியமான உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அதிகம் புரிந்துகொள்ள முடிந்தது. 2-ஆம் ஆண்டு படிக்கும் 268 பேர் கொண்ட மாணவர்களின் குழுவுடன் 1930-களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய ஆராய்ச்சி பின்னர் மேலும் 456 மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களுடன் நேர்காணல்களை நடத்தி, சில வருடங்களுக்கு ஒருமுறை அவர்களின் மருத்துவ பதிவுகளை அலசி ஆராய்ந்தனர். அவர்களின் நெருங்கிய உறவுகளே அவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை யூகிப்பதில் மிகப்பெரிய காரணி என்பதை அவர்கள் கண்டறிந்தனர். சரியான நபர்களால் நாம் சூழப்பட்டிருந்தால், ஆழ்ந்த மகிழ்ச்சியின் உணர்வை நாம் அனுபவிப்போம்.
பிலிப்பியர் 1-ல் அப்போஸ்தனாகிய பவுல் விவரிக்கிறதை இது பிரதிபலிக்கிறது. சிறையிலிருந்து அவர் எழுதுகையில், பவுலால் உதவ முடியாது எனினும் ஒவ்வொரு முறையும் அவர் அவர்களை நினைக்கிற பொழுதெல்லாம் அவர்களுக்காக தேவனை ஸ்தோத்தரித்து, “சந்தோஷத்தோடே” விண்ணப்பம்பண்ணுகிறார் என்று அவரது நண்பர்களிடம் கூறுகிறார் (வச. 4). ஆனால் இவர்கள் சாதாரண நண்பர்கள் அல்ல; இவர்கள் இயேசுவினுள் சகோதர சகோதரிகள், அவர்கள் “தேவனின் கிருபையில் பங்குள்ளவர்கள்”, பவுலுடன் சுவிசேஷ ஊழியத்தில் பங்காளிகள் (வச. 7). அவர்களின் உறவு பகிர்வினாலும் மற்றும் பரஸ்பரத்தினாலும் உருவான ஒன்று – தேவனின் அன்பினாலும் மற்றும் சுவிசேஷத்தினாலும் வடிவமைக்கப்பட்ட ஒரு உண்மையான ஐக்கியம்.
ஆம், நண்பர்கள் முக்கியம் தான், எனினும் கிறிஸ்துவுக்குள் உள்ள சகதோழர்கள் ஒரு உண்மையான மற்றும் ஆழ்ந்த மகிழ்ச்சியின் வினையூக்கிகள். வேறு எதை விடவும் தேவனின் கிருபையே நம்மை ஒன்றாக பிணைக்க முடியும், மேலும் வாழ்க்கையின் எந்த இருள் சூழ்ந்த காலங்களிலும் கூட இந்த பிணைப்பினால் வரும் மகிழ்ச்சி நீடிக்கும்.
உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள் யார்? உங்கள் உறவுகளின் பொருள் என்ன? தேவனின் கிருபை உங்கள் தோழர்களின் தேர்வை எப்படி வடிவமைத்திருக்கிறது?
அன்புள்ள தேவனே, நட்பு எனும் பரிசுக்கு நன்றி. எனக்கு உண்மையுள்ள தோழர்களாக இருக்கிறவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க உதவும். அவர்களை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கவும் எனக்கு கிருபை தாரும்..