மைக்கேலேஞ்சலோவின் படைப்புகள் இயேசுவின் வாழ்க்கையின் பல அம்சங்களை ஆராய்ந்தன, எனினும் மிகவும் கடுமையான ஒன்று மிகவும் எளிமையானவற்றுள் ஒன்றாகும். 1540 களில் அவர் தனது நண்பர் விட்டோரியா கொலோனாவுக்காக ஒரு படத்தை (இறந்த கிறிஸ்துவின் உடலை வைத்திருக்கும் இயேசுவின் தாயின் படம்) வரைந்தார். சுண்ணாம்பில் வரையப்பட்டது. மரியாள் தனது மகனின் உடலை மடியில் கிடத்தியபடி வானத்தை நோக்கியதை சித்தரிக்கிறது. மரியாவின் பின்னிருந்து எழும்பிய சிலுவையின் மேல் உத்திரம் டான்டே சொர்க்கத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்த இந்த வார்த்தைகளை சுமந்து கொண்டிருந்தது,”எவ்வளவு இரத்தம் செலவாகும் என்பதை அவர்கள் அங்கே எண்ணிப் பார்க்கவில்லை.” மைக்கேலேஞ்சலோவின் கருத்து ஆழமானது: இயேசுவின் மரணத்தைப் பற்றி நாம் நிதானிக்கும்போது, அவர் கொடுத்த விலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
கிறிஸ்து செலுத்திய விலை “முடிந்தது” (யோவான் 19:30) என்ற அவரது இறக்கும் அறிவிப்பில் உள்ளது. “முடிந்தது” (டெட்டெலெஸ்டாய்) என்ற சொல் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டது – ஒரு ரசீதுக்கான பணம் செலுத்தப்பட்டது, ஒரு பணி முடிந்தது, ஒரு பலி செலுத்தப்பட்டது, ஒரு தலைசிறந்த படைப்பு முடிந்ததைக் காட்டுவதற்கு. இயேசு சிலுவையில் நம் சார்பாக செய்த காரியங்களுக்கு அவை ஒவ்வொன்றும் பொருந்தும்! ஒருவேளை அதனால்தான் அப்போஸ்தலன் பவுல் எழுதினார், “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.” (கலாத்தியர் 6:14).
நம்முடைய இடத்தை எடுக்க இயேசுவின் விருப்பம், தேவன் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு நித்திய சான்று. அவர் செலுத்திய விலையைப் பற்றி நாம் நிதானிக்கும்போது, அவருடைய அன்பையும் கொண்டாடுவோம் – சிலுவைக்கு நன்றி செலுத்துவோம்.
டெட்டெலெஸ்டாயின் ஒவ்வொரு அர்த்தமும் இயேசுவின் சிலுவையிலும், அவர் அங்கு சாதித்தவற்றிலும் எவ்வாறு பயன்படுத்தப்படலாம்? ஏன் ஒவ்வொன்றும் உங்களுக்கு அர்த்தமாகிறது?
பிதாவே, என் சார்பாக இயேசு செய்த தியாகத்தை நான் கருத்தில் கொள்ளும்போது, நான் தாழ்மையும் ஆழ்ந்த நன்றியுணர்வும் அடைகிறேன். இயேசுவுக்காக நன்றி, சிலுவைக்காக உமக்கு நன்றி.