இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள புத்தகக் கடையான அக்டோபர் புத்தகங்கள் கடைக்கு அதன் சரக்குகளைத் தெரு கோடியில் உள்ள முகவரிக்கு நகர்த்த இருநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவினார்கள். உதவியாளர்கள் நடைபாதையில் வரிசையாக நின்று புத்தகங்களை ஒரு “மனித சுமக்கும்தொடர் பட்டையின்” வழியே கைமாற்றி அனுப்பினர். தன்னார்வலர்கள் செயலைக் கண்ட ஊழியர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார், “மக்கள் [உதவுவதைப்] பார்ப்பது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்தது. அவர்கள் பெரிய விஷயத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினர்.”
 
நாம் நம்மை விட மிகப் பெரியகாரியத்தில் ஒரு பகுதியாக இருக்க முடியும். தேவன் தம்முடைய அன்பின் செய்தியை இந்த உலகிற்கு கொண்டு செல்ல நம்மை பயன்படுத்துகிறார். யாரோ ஒருவர் நம்முடன் அந்த செய்தியைப் பகிர்ந்ததால் நாம் வேறொரு நபரிடம் திரும்பி அதை பகிரலாம். பவுல் இதை இவ்வாறு ஒப்பிடுகிறார்,- தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டுவது – ஒரு தோட்டத்தை வளர்ப்பது. நம்மில் சிலர் விதைகளை நடவு செய்கிறோம், நம்மில் சிலர் விதைகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறோம். பவுல் சொன்னது போல், “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (1 கொரிந்தியர் 3: 9).

ஒவ்வொரு வேலையும் முக்கியம். ஆனால் அனைத்தும் தேவஆவியின் வல்லமையால் செய்யப்படுகின்றன. தேவன் அவர்களை நேசிக்கிறார் மற்றும் அவர்கள் பாவத்திலிருந்து விடுதலையாகும்படி தம்முடைய குமாரனை அவர்களுடைய இடத்தில் மரிக்கும்படி அனுப்பினார் என்பதை அவர்கள் கேட்கும்போது தம்முடைய ஆவியால், ஆவிக்குரிய ரீதியில் அவர்கள் செழிக்க தேவன் உதவுகிறார் (யோவான் 3:16).

தேவன் உங்களையும் என்னையும் போன்ற ‘தன்னார்வலர்கள்’ மூலமாக பூமியில் தனது அனேகமான பணிகளை செய்கிறார். நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பங்களிப்பையும் விட மிகப்பெரிய ஒரு சமூகத்தின் ஒரு பகுதியாக நாம் இருந்தாலும், அவருடைய அன்பை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் அதை வளர்க்க உதவலாம்.