ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என் அப்பா தனது படதொகுப்பில் சிறந்து விளங்க முயன்றார். அவரது ஆர்வம் தவறுகளைத் தேடுவது மட்டுமல்ல, தெளிவு, தர்க்கம், நிலையான ஓட்டம் மற்றும் இலக்கணம் ஆகியவற்றின் அடிப்படையில் நகலை சிறந்ததாக்குவதாகும். அப்பா தனது திருத்தங்களை குறிப்பிட சிவப்பு நிற எழுதுகோலை விட ஒரு பச்சை எழுதுகோலையே பயன்படுத்தினார். பச்சை எழுதுகோலை “நட்பாக” அவர் உணர்ந்தார். அதே நேரத்தில் சிவப்பு நிற அடிக்கோடுகள் ஒரு புதிய அல்லது நம்பிக்கையற்ற எழுத்தாளரைக் பதற்றமளிக்கும் என்றெண்ணினார். ஒரு சிறந்த வழியை மென்மையாகச் சுட்டிக்காட்டுவதே அவரது நோக்கம்.
இயேசு மக்களை கடிந்துக்கொண்டபோது, அன்பில் அவர் அவ்வாறு செய்தார். சில சூழ்நிலைகளில்-பரிசேயர்களின் மாய்மாலத்தை அவர் எதிர்கொண்டது போன்றவற்றில் (மத்தேயு 23) – அவர் அவர்களைக் கடுமையாகக் கண்டித்தார், ஆனாலும் அவர்களுடைய நலனுக்காகதான். ஆனால் அவரது தோழியான மார்த்தாளின் விஷயத்தில் ஒரு மென்மையான கடிந்துக்கொள்ளுதல் மட்டுமே தேவைப்பட்டது (லூக்கா 10: 38–42). அவருடைய கண்டிப்புக்கு பரிசேயர்கள் மோசமாக பதிலளித்தாலும் மார்த்தாள் அவருடைய அன்பான சிநேகிதர்களில் ஒருவராக இருந்தார். (யோவான் 15:31-32).
திருத்தம் சங்கடமாக இருக்கக்கூடும், நம்மில் சிலர் இதை விரும்புகிறோம். சில நேரங்களில், நமது பெருமை காரணமாக, அதை சந்தோஷமாகப் பெறுவது கடினம். நீதிமொழிகள் புத்தகம் ஞானத்தைப் பற்றி அதிகம் பேசுகிறது, மேலும் “கடிந்து கொள்ளுதலைக் கேட்பது” ஞானத்திற்கும் புரிதலுக்கும் ஒரு அடையாளம் என்றும் குறிக்கிறது. (15: 31-32).
தேவனுடைய அன்பான கடிந்துக்கொள்ளுதல் நம் திசையை சரிசெய்யவும், அவரை மிகவும் நெருக்கமாக பின்பற்றவும் உதவுகிறது. அதை மறுப்பவர்கள் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள் (வச. 10), ஆனால் பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் அதற்கு பதிலளிப்பவர்கள் ஞானத்தையும் புத்தியையும் பெறுவார்கள் (வச. 31-32).
உங்கள் பரலோகத் தகப்பனிடமிருந்து வரும் அன்பான கடிந்துக்கொள்ளுதலுக்கு நீங்கள் வழக்கமாக எவ்வாறு பதிலளிப்பீர்கள்? உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நீங்கள் ஒருவரிடமிருந்து பெற்ற கடிந்துக்கொள்ளுதல் என்ன?
பிதாவே, உம் அன்பான கடிந்துக்கொள்ளுதலை தயவுடன் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள எனக்கு உதவும். அதனால் நான் ஞானத்திலும் புரிதலிலும் வளர முடியும்.