நான் என் மகனுக்கு கணக்கு வீட்டுப்பாடத்தில் உதவி செய்தபோதுதான், அதே பாடத்தில் எழும் சிக்கலான கணக்குகளை செய்வதில் அவனுக்கு ஆர்வம் குறைவாக உள்ளது என்பது வெளிப்பட்டது. “நான் அதை செய்து முடித்துவிட்டேன்”, என்று அவன் என்னிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தான், அப்படி சொன்னால் நான் அவனை எல்ல வீட்டுப்பாடத்தையும் செய்யசொல்லி வற்புறுத்தமாட்டேன் என்று நம்பி அப்படி சொன்னான். நடைமுறையில் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் கற்றுக் கொள்ளும் வரை ஒரு கருத்து ஒரு கருத்து மட்டுமே என்று நான் அவனுக்கு கனிவாக விளக்கினேன்.
பவுல் கடைப்பிடிப்பதை குறித்து பிலிப்பியில் உள்ள தனது நண்பர்களுக்கு எழுதுகிறார். “நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்” (பிலிப்பியர் 4:9). அவர் ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுகிறார்: ஒப்புரவாவது – அவர் எயோதியாளும், சிந்திகேயாளும் ஒப்புரவாகும்படி வலியுறுத்துகிறார் (வ. 2-3); சந்தோஷம் – அவர் தனது வாசகர்களை பக்குவப்படும்படி நினைப்பூட்டுகிறார் (வ. 4); சாந்தகுணம் – உலகத்துடனான அவர்களின் உறவில் வேலைசெய்யமாறு அவர் அவர்களை வலியுறுத்துகிறார் (வ. 5); ஜெபம் – அவர் தனிப்பட்ட முறையிலும் மற்றும் எழுத்திலும் அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்ததுபோல (வ. 6-7); சிந்தை – அவர் சிறையிலும் வெளிப்படுத்திகாட்டியபடி (வ. 8). ஒப்புரவாகுதல், சந்தோஷம், சாந்தகுணம், ஜெபம் மற்றும் சிந்தை – இயேசுவில் விசுவாசிகளாக வாழ அழைக்கப்பட்ட விஷயங்கள் இவை பக்குவப்பட மற்றெந்த பழக்கத்தையும் போல இந்த நற்பண்புகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
பவுல் ஏற்கனவே பிலிப்பியருக்கு சொன்னது போல சுவிசேஷத்தின் நற்செய்தி ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (2:13). நாம் நம் சொந்த வல்லமையில் ஒருபோதும் செயல்படுவதில்லை. தேவனே நமக்கு தேவையானதை போஷிக்கிறார் (4:19).
நீங்கள் இயேசுவைப் பின்பற்ற முயற்சிக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்? பரிசுத்த ஆவியின் வல்லமையில் நீங்கள் எவ்வாறு செயல்பட முடியும்?
இயேசுவே பரிசுத்த ஆவியின் வல்லமையால் உம் வழிகளைக் கடைப்பிடிக்க எனக்கு கிருபை தருவீராக. தொடர்ச்சியான செயல்களால் என் வாழ்க்கையின் நிலத்தை பண்படுத்த என்னை பெலப்படுத்தும் - அடிக்கடி தோல்வியடைகின்ற என் வலிமையற்ற மற்றும் பலவீனமானவற்றைக் கூட - எனவே ஆவியின் கனி வெளிப்படும்.
DiscoverySeries.org/Q0301 இல் ஆவியால் நிரப்பப்படுவதைப் படியுங்கள்.