அமெரிக்காவில், ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த உள்ளூர் இசைக்குழு, ஒவ்வொரு ஆண்டும் நகரத்தில் நடக்கும் ஒரு மாற்றத்தைப் பற்றி ஒரு பாடலைப் பாடுவார்கள். “ஆண்டின் முதல் மெய்யான பனிப்பொழிவைப் பெறும்போதெல்லாம் புனிதமான ஒன்று நடப்பதைப்போல அது இருந்தது” என்று இசைக்குழுவின் இணை நிறுவனர் விளக்கினார். அது கொஞ்சம் புதிய தொடக்கத்தைப் போல இருந்தது. நகரம்தன் வேகத்தை குறைத்து, அமைதியாக வளர்ந்தது.
நீங்கள் கடுமையான பனிப்பொழிவை அனுபவித்திருந்தால், அது ஒரு பாடலை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். பனி அழுக்குகள் மற்றும் குழப்பத்தை மறைக்கும்போது ஒரு அற்புதமான அமைதி உலகத்தை ஈர்க்கிறது. சில தருணங்களுக்கு குளிர்காலத்தின் இருண்ட தன்மையானது பிரகாசிப்பிக்கிறது, எங்களின் பிரதிபலிப்பையும், மகிழ்ச்சியையும் வரவழைக்கிறது.
தேவனை பற்றிய நல்ல பார்வையைப் பெற்றிருக்கக்கூடிய யோபுவின் நண்பரில் ஒருவரான எலிஹு சிருஷ்டிப்பு எப்படி நம் கவனத்தை இழுக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.“தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்” என்று அவர் கூறுகிறார் (யோபு 37:5). “அவர் உறைந்த மழையையும் கல்மழையையும் தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.” இத்தகைய மகத்துவம் ஒரு தெய்வீக ஓய்வை வேண்டி நம் வாழ்க்கையை இடைமறிக்கிறது. “தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்” என்பதை எலிஹூ கவனித்தார் (வ 6-7).
இயற்கை சில நேரங்களில் நாம் விரும்பாத வழிகளில் நம் கவனத்தை ஈர்க்கிறது. நமக்கு என்ன நேர்ந்தாலும் அல்லது நம்மை சுற்றியுள்ள எதை நாம் கவனித்தாலும், ஒவ்வொரு கணமும்-அற்புதங்களும், அச்சுறுத்துதல்களும், அல்லது சாதாரணமானவைகளும் கூட நம் ஆராதனையை ஊக்குவிக்கும். நமக்குள் இருக்கும் கவிஞரின் இதயம் தெய்வீக அமைதிக்காக ஏங்குகிறது.
எந்த நிகழ்வுகள் அல்லது காரியங்கள் தேவனின் மகத்துவத்தையும் படைப்பாற்றலையும் பற்றி உங்களை சிந்திக்கத் தூண்டுகின்றது? இன்று உங்கள் சாதாரண நேரங்களில் கூட அவருடைய அற்புதங்களை நீங்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்?
பிதாவே, இன்று எல்லாவற்றிலும் உம்முடைய கரத்தைக் காண எனக்கு உதவும். உங்கள் அற்புதமான சிருஷ்டிப்பை பாராட்ட எனக்கு மனதை தாரும்.