ஒரு நாள் காலையில், குடும்ப ஜெபம் ஒரு ஆச்சர்யமான அறிவிப்புடன் முடிவடைந்தது. “ஆமென்” என்று அப்பா சொன்னவுடனேயே ஐந்து வயது கவி, “நான் யோவானுக்கு ஜெபம் செய்தேன். ஏனென்றால் ஜெபத்தின் போது அவன் கண்களைத் திறந்திருந்த்தான் என்று அறிவித்தாள்.
வேதம் பரிந்துபேசும் ஜெபத்திற்கு நம்மை அழைப்பது, உங்கள் பத்து வயது சகோதரரின் பிரார்த்தனை நெறிமுறைக்காக ஜெபிப்பதை மனதில் வைத்து கொண்டு அல்ல என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஆனால் மற்றவர்களுக்காக நாம் ஜெபிக்க முடியும் என்பதையாவது கவி உணர்ந்தாள்.
வேறொருவருக்காக ஜெபிப்பதன் முக்கியத்துவத்தை வேதாகம ஆசிரியர் ஓஸ்வால்ட் சேம்பர்ஸ் வலியுறுத்துகிறார். “பரிந்துபேசுதல் என்பது உங்களை தேவனின் இடத்தில் வைக்கிறது; அது அவருடைய மனதையும், கண்ணோட்டத்தையும் கொண்டுள்ளது” என்று அவர் சொன்னார். தேவனைப் பற்றியும், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றியும் நமக்குத் தெரிந்தவற்றின் வெளிச்சத்தில் மற்றவர்களுக்காக ஜெபிப்பது இது.
பரிந்துபேசும் ஜெபத்திற்கு தானியேல் 9 ல், ஒரு சிறந்த உதாரணத்தைக் காண்கிறோம். யூதர்கள் பாபிலோனில் எழுபது ஆண்டுகள் சிறைபிடிக்கப்படுவார்கள் என்ற தேவனின் வேதனையான வாக்குத்தத்ததை தீர்க்கதரிசி புரிந்துகொண்டார் (எரேமியா 25:11-12). அந்த ஆண்டுகள் தங்களுடைய நிறைவை நெருங்குவதை உணர்ந்த தானியேல் ஜெப சிந்தைக்குள் சென்றான். அவன் தேவனுடைய கட்டளைகளை குறிப்பிட்டான் (தானியேல் 9:4-6). தன்னை தாழ்த்தினான் (வ 8). அவன் தேவனுடைய தன்மையை கனம்பண்ணினான் (வ 9). பாவத்தை அறிக்கையிட்டான் (வ 15). அவன் தன் ஜனங்களுக்காக ஜெபித்தபோது அவருடைய இரக்கத்தை சார்ந்துக்கொண்டான் (வ 18) தேவனிடமிருந்து உடனடியாக பதிலைப் பெற்று கொண்டான் (வ 21).
எல்லா ஜெபங்களும் அத்தகைய வியத்தகு பதிலுடன் முடிவடையாது. ஆனால் நம்பிக்கை மற்றும் பற்றோடு மற்றவர்களின் சார்பாக தேவனிடம் செல்லலாம் என்று நம்புங்கள்.
நீங்கள் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது தேவனுடைய மனதை எவ்வாறு தேடுகிறீர்கள்? அவருடைய கண்ணோட்டத்தை நீங்கள் எவ்வாறு நாடுகிறீர்கள்?
அன்புள்ள பரலோகப் பிதாவே, உம்மை நன்கு அறிந்துகொள்ள எனக்கு உதவும். அதனால் நான் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது உமது சித்தத்தைப் பற்றிய எனது அறிவின் மூலம் எனது விண்ணப்பங்களை வடிகட்ட முடியும்.
ஜெபத்தை பயிற்சி செய்வது பற்றி மேலும் அறிய ChristianUniversity.org/SF120 வருகை தாருங்கள்