தங்கள் சொந்த மொழிகளில் வேதத்தை பெறவிரும்பிய, தங்களுடைய சபை மக்களின் போராட்டத்தை “காலம் கடந்தது, போர் நுழைந்தது” என்றுதான் தெற்கு சூடானின் கெலிகோ மக்களின் பாதிரியார் செமி நிகோ விவரிப்பார். உண்மையை சொல்லப்போனால், ஒரு வார்த்தைகூட கெலிகோ மொழியில் அதுவரைக்கும் அச்சடிக்கப்பட்டிருக்கவில்லை. பல தசாப்தங்களுக்கு முன்பு பாதிரியார் நிகோ வின் பாட்டனார் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் வேலையை தைரியமாக தொடங்கினார். ஆனால் போரும், அமைதியின்மையும் அந்த முயற்சியை தடுத்துநிறுத்திக்கொண்டே இருந்தன. வடக்கு உகாண்டாவிலுள்ள தங்களுடைய அகதிகள் முகாம்கள் மற்றும் காங்கோ வின் ஜனநாயக குடியரசின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதிலும் பாதிரியாரும் அவருடன் அவருடைய சக விசுவாசிகளும் அந்த திட்டத்தை உயிர்ப்போடு வைத்திருந்தனர்.
அவர்களுடைய விடாமுயற்சி பலனளித்தது. ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு பிறகு, ஒரு கிளர்ச்சியூட்டும் கொண்டாட்டத்தில் வேதாகம புதியஏற்பாடு கெலிகோவில் அகதிகளுக்கு கொடுக்கப்பட்டது. “கெலிகோவின் உத்வேகம் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டது,” என்று ஒரு திட்ட ஆலோசகர் சொல்கிறார்.
கெலிகோ மக்களின் அர்ப்பணிப்பு தேவன் யோசுவாவிடம் கோரிய நிலைத்தன்மையை பிரதிபலிப்பதாக உள்ளது. “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” (யோசுவா 1:8). தேவன் கூறியபடி சமமான விடாமுயற்சியுடன் கெலிகோ மக்கள் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பை அடைந்தனர். இப்பொழுது,“நீ அவர்களை முகாம்களில் காணும்போது அவர்கள் சிரிக்கிறார்கள்” என்றுஒரு மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார். வேதத்தை கவனிப்பதும் புரிந்துகொள்வதும் “அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது”. கெலிகோ மக்களை போல நாமும் வேதத்திலிருந்து வல்லமையையும்,ஞானத்தையும் தேடுவதை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது.
வேதத்தை தேடி வாசிப்பதிலும் கற்பதிலும் நீங்கள் எவ்வளவு விடாமுயற்சியுடன் இருக்கிறீர்கள்? அதை புரிந்துகொள்ள என்ன வழியில் உங்களுக்கு உதவி தேவை? அதில் ஆழமாக வளர உங்களுக்கு உதவ நீங்கள் யாரை கேட்பீர்கள்?
அன்புள்ள தேவனே, என் வாழ்க்கைக்கு வேதம் அத்தியாவசியமாகும். அதை தேடவும், கற்கவும், அறியவும், உமது ஞானத்தை புரிந்துகொள்ளவதற்கான ஆவலை நான் விட்டுவிடாதிருக்கவும், என்னுள் பெரும் பசி தாகத்தை எழுப்பிவிடும்.
வேதத்தை எப்படி கற்பது என்பதை மேலும் அறிய ChristianUniversity.org/SF106. என்ற தளத்திற்கு செல்லவும்.