ஒரு சிறுவனாக, இறையியலாளர் புரூஸ் வேர், 1 பேதுரு 2:21-23 நம்மை இயேசுவைப் போல இருக்கும்படி அழைக்கிறார் என்று விரக்தியடைந்தார். வேர் தனது இளமை உற்சாகத்தைப் பற்றி ‘தி மேன் க்ரைஸ்ட் ஜீசஸ்’ என்னும் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். “இது நியாயமில்லை, நான் தீர்மானித்தேன். குறிப்பாக பாவம் செய்யாத ஒருவரின் அடிச்சுவடுகளை பின்பற்றுமாறு அந்தப்பத்தியில் கூறும்போது, இது முற்றிலும் இயற்கையை மீறிய ஒன்று… இதை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கு தேவன் உண்மையில் எந்த அர்த்தத்தில் இப்படி சொல்கிறார் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை.”
அத்தகைய விவிலிய சவாலை வேர் ஏன் மிகவும் அச்சுறுத்தலாகக் கண்டார் என்பது எனக்குப் புரிகிறது! ஒரு பழைய கோரஸ் கூறுகிறது, “இயேசுவைப் போல இருக்க, இயேசுவைப் போல இருக்க வேண்டும். அவரைப் போல இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ” ஆனால் வேர் சரியாகக் குறிப்பிட்டது போல, நாம் அதை செய்ய முடியாதவர்களாய் இருக்கிறோம். இதனால் நாம் ஒருபோதும் இயேசுவைப் போல ஆகவே முடியாது என்ற முடிவுக்கு வருகிறோம்.
இருப்பினும், நாம் தனித்து விடப்படவில்லை. பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய பிள்ளைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறார், இதனால் கிறிஸ்து நம்மில் உருவாக முடியும் (கலா. 4:19). ஆகவே, பவுல் ஆவியானவரை பற்றி எழுதிய சிறந்த அத்தியாயத்தில், “தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;” (ரோம. 8:29) என்று நாம் வாசிப்பதில் ஆச்சரியமில்லை. தேவன் தம்முடைய வேலையை நம்மில் நிறைவு செய்வதைக் காண்பார். அவர் நம்மில் வாழும் இயேசுவின் ஆவியின் மூலமாக அதைச் செய்கிறார்.
நாம் ஆவியானவரின் கிரியைகளுக்கு நாம் கீழ்ப்படியும்போது, நாம் உண்மையிலேயே இயேசுவைப் போலவே ஆகிவிடுகிறோம். இது தேவனின் பெரிய ஆசை என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலானது!
ஆவியின் கனியின் எந்தப் பண்பில் நீங்கள் அதிக அளவில் வாழ விரும்புகிறீர்கள்? (கலாத்தியர் 5:22–23 ஐக் காண்க). அவ்வாறு செய்ய உங்களுக்கு என்ன உதவும்?
பிதாவே, நான் உங்கள் மகனைப் போலவே இருக்க விரும்புகிறேன், ஆனால் பெரும்பாலும் வார்த்தை, சிந்தனை அல்லது செயலில் குறைவுபடுகிறேன். என்னை மன்னியும், இயேசு என்னுள் உருவாகும்படி உமது ஆவியின் செயலுக்கு அடிபணிய எனக்கு உதவும்.