மேரே கிறித்துவத்தில், சி.எஸ். லூயிஸ் நாம் பெருமிதம் கொள்கிறோமா என்று கண்டுபிடிக்க சில கேள்விகளைக் கேட்க பரிந்துரைத்தோம்: மற்றவர்கள் என்னை பொருட்படுத்தாமல் இருக்கும் பொழுது அல்லது, கீழ்த்தரமாக பார்க்கும் பொழுது அல்லது உதாசீனப்பதுதும் பொழுதும் அது எனக்கு எவ்வளவு விரும்பத்தகாததாக இருக்கிறது. லூயிஸ் பெருமையை “மிகவும் தீமை” மற்றும் வீடுகளிலும் நாடுகளிலும் துயரத்திற்கு முக்கிய காரணியாகக் கண்டார். அவர் அதை ஒரு “ஆவிக்குரிய புற்றுநோய்” என்று அழைத்தார், இது அன்பு, மனநிறைவு மற்றும் பொது அறிவு ஆகியவற்றை அழிப்பதாக இருக்கிறது.
பெருமை என்பது காலங்காலமாக ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம், சக்திவாய்ந்த கடற்கரை நகரமான தீரின் தலைவரை தேவன் தனது பெருமைக்கு எதிராக எச்சரித்தார். ராஜாவின் பெருமை அவரது வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்: “நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால் இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தார் உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்.” – (எசே. 28:6-7). அவர் ஒரு தேவன் அல்ல, மனிதர் என்று அவர் அறிவார் (வச. 9).
பெருமைக்கு மாறாக பணிவு என்பது தேவனை அறிவதன் மூலம் நாம் பெறும் ஒரு நல்லொழுக்கம் என்று லூயிஸ் பெயரிட்டார். லூயிஸ், உறவில் இருக்கும் பொழுது நாம் “மகிழ்ச்சியுடனும், தாழ்மையுடனும்” இருப்போம். முன்னர் நம்மை அமைதியற்றவர்களாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் மாற்றிய நம் சொந்த கர்வத்தைப் பற்றிய வேடிக்கையான முட்டாள்தனத்திலிருந்து விடுபடுவதில் நிம்மதி அடைகிறோம். நாம் தேவனை எவ்வளவு அதிகமாக ஆராதிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அவரை அறிவோம், மேலும் அவருக்கு முன்பாக அவ்வளவு அதிகமாக நம்மைத் தாழ்த்திக் கொள்வோம். நாம் மகிழ்ச்சியோடும் பணிவோடும் அன்பு செலுத்தி சேவை செய்பவர்களாக இருப்போம்.
நீங்கள் பெருமைப்படுகிறீர்களா இல்லையா என்பது குறித்த லூயிஸின் கேள்விகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளித்தீர்கள்? அது உங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததா? ஏன் அல்லது ஏன் இல்லை?
நீர் என்னை உருவாக்கியவர் என என் அடையாளத்தை நான் வெளிப்படுத்த எனக்கு உதவும். நீர் பெரியவர், வலிமை மிக்கவர் என்பதை அறிவேன் ஆயினும் நீர் என்னை நேசிக்கிறீர்.