ஒரு பெரிய வண்டு ஒரு பூப்பூக்கும் புதரில் மெல்ல இறங்கியதை நான் பார்த்தபோது, அந்த புதரின் பசுமையான இலைகள் வண்ணமயமாக விரிவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அதன் கரு நீல மலர்கள் கண்களையும் வண்டுகளையும் ஒரே மாதிரி ஈர்த்தன. இலையுதிர் காலத்தின் கடைசி நாட்கள் என்பதால், அவை மீண்டும் பூக்குமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். என் மனைவியின் பெற்றோர் ஒரு பஞ்சு செடியை ஒரு சிறு துண்டாக குறைத்த போது அவர்கள் அதை அகற்ற முடிவு செய்தார்கள் என்று நான் கருதினேன். கொடூரமாக தோன்றிய, வெட்டி களைதலின் பிரகாசமான விளைவை நான் இப்பொழுது கண்டேன்.
இத்தகைய கடுமையான வெட்டுகளால் ஏற்படுகின்ற ஆச்சரியப்படத்தக்க அழகுதான் விசுவாசிகளிடையே கடவுளின் வேலையை விவரிக்க இயேசு வெட்டி களைதலின் உருவகத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். யோவான் 15ல் இயேசு கூறுகிறார், “நான் மெய்யான திராட்சச்செடி. என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார். கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும் படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார்.” (வச. 1-2).
நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் தேவன் எப்போதும் நமது ஆவிக்குரிய புதுப்பித்தல் மற்றும் கனி கொடுத்தல் இவற்றை நோக்கியே நம்மில் செயல்படுகிறார் என்பதை இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. வெட்டி களைதலின் பருவங்களான துன்பப்படுதல் அல்லது உணர்ச்சியின் மலட்டுத்தன்மை இவற்றின் போது, நாம் எப்போதாவது மீண்டும் செழித்து வளர முடியுமோ என்று ஆச்சரியப்படுகிறோம். ஆனால் கிறிஸ்து தொடர்ந்து அவருடன் நாம் நெருக்கமாக இருக்கும்படி நம்மை ஊக்குவிக்கின்றார். “கொடியானது திராட்சைச் செடியில் நிலைத்திராவிட்டால், அது தானாய் கனி கொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்” (வச. 4). நாம் தொடர்ந்து இயேசுவிடமிருந்து ஆவிக்குரிய ஊட்டத்தை பெறுகையில் இதன் விளைவாக நம் வாழ்வில் வரும் அழகும் கனி தருதலும்,தேவனின் நன்மையை இந்த உலகிற்கு காண்பிக்கும்.
தேவன் உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியையும் கனி தருதலையும் அளிக்க போராட்டத்தை பயன்படுத்துவதை நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்தீர்களா? கடவுளின் கரத்தின் செயல்பாடுகளை நம் வாழ்வில் பார்ப்பதற்கான கண்ணோட்டத்தை காலம் தருகிறது என்பதை நீங்கள் எவ்வாறு நினைக்கிறீர்கள்?
பிதாவே, என்னுடைய வாழ்வில் அழகையும் மாற்றத்தையும் கொண்டுவருவதற்கான வேலையில் நீர் ஈடுபட்டு இருக்கிறீர் என்பதை அறிந்து, என்னுடைய வாழ்வின் கடுமையான காலங்களில் உம்மை நான் விசுவாசிக்க எனக்கு உதவும். உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்த உதவ
