1994-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தேசத்தின் அரசு நிறவெறி (apartheid) அமைப்பில் இருந்து ஒரு புதிய ஜனநாயக திட்டத்தை அமல்படுத்தியது. இனப் பிரிவினையில் இருந்து (கருப்பினத்தவர் மற்றும் வெள்ளை இனத்தவர் பிரிந்து வாழ்ந்தது) ஒன்றிணைந்த மக்களாட்சிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த வருடங்களில் இனப்பிரிவினால் நடந்த குற்றங்களை எப்படி கையாள்வது என்பதை புதிய அரசாங்கத்தால் முடிவு எடுக்க முடியவில்லை.. இருப்பினும் தேச தலைவர்களால் கடந்த கால குற்றங்களை விட்டு விடவும் முடியவில்லை. ஆனால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை கொடுப்பது அந்த தேசத்தின் காயங்களை ஆழமாக்கிவிடும். தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின ஆங்கிலிக்கன் திருச்சபையின் பேராயரான டெஸ்மன்ட் டுட்டு தனது “மன்னிப்பு இல்லாமல் எதிர்காலம் இல்லை” (No Future Without Forgiveness) என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார் “நமக்கு சுலபமாக நீதி கிடைத்திருக்கலாம், பழிவாங்கும் நீதி கூட கிடைத்திருக்கும் ஆனால் தென் ஆபிரிக்க முழுவதுமாக அழிந்திருக்கும்” என்று.
அந்த புதிய ஜனநாயக அரசு அமைத்த “உண்மை மற்றும் வேற்றுமையை அகற்றும்” (Truth and Reconciliation Committee) குழு ஒன்றை அமைத்து உண்மை, நீதி, இரக்கத்தின் கடினமான பாதையை தேர்ந்தெடுத்தது. தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பினவர்களுக்கு மறுசீரமைப்பிற்கான வழி வழங்கப்பட்டது. தைரியமாக உண்மையை எதிர்கொண்டதால் அந்த தேசத்தால் குணமடைய முடிந்தது.
ஒருவிதத்தில், தென் ஆப்பிரிக்காவின் சங்கடங்கள் நமது போராட்டங்களையும் பிரதிபலிக்கலாம். நீதியையும் இரக்கத்தையும் பின்தொடர நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் (மீகா6:8), ஆனால் அநேக நேரங்களில் இரக்கம் என்பது பொறுப்பில்லாத தன்மையாகவும், நீதிக்காக பின் தொடர்வது பழி வாங்குவதாகவும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
தீமையை வெறுக்கும் அன்பை உடையவர்களாய் மாத்திரம் அல்லாமல் (ரோ 12:9) நம்மோடு இருப்பவர்களின் மறுரூபமாகுதலையும் விரும்புபவராக நாம் இருக்க வேண்டும் (ரோ 13:10). இயேசுவின் ஆவியானவரின் வல்லமையால் தீமையை நன்மையால் மேற்கொள்வது என்ன என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம் (12:21).
எப்பொழுது கிருபையினாலும் இரக்கத்தினாலும் வரும் முடிவு அநீதியினால் முறியடிக்கப்படுவதை பார்த்தீர்கள்?
நீதியும் இரக்கமும் எப்பொழுது ஒன்றிணைந்து செயல்படுவதை பார்த்தீர்கள்?
அன்பான தேவனே, என்னை சுற்றி உள்ள சோதனைகளும் அநீதியும் என் இதயத்தை உடைக்கும் போது உம் வல்லமையுள்ள குணமாக்கும் அன்பை சார்ந்து வாழ எனக்கு உதவியருளும். என் வாழ்வை நீதி, இரக்கம், அன்பினாலே வழிநடத்த எனக்கு உதவும்.