சுவிசேஷம் தடை செய்யப்பட்ட தேசத்தில் ஆண்ட்ரூ வாழ்ந்து வந்தார். உங்கள் விசுவாசத்தை எப்படி ரகசியமாக காத்து வருகிறீர்கள் என்று நான் கேட்டபோது, அவர் அதை ரகசியமாக வைப்பதில்லை என்று கூறினார். அவர் சபையின் முத்திரையை எப்போதும் தனது சட்டையின்மேல் அணிந்து தான் வெளியே செல்வார். அவர் கைது செய்யப்படும் நேரங்களில் கூட காவலர்களிடம் “அவர்களுக்கும் இயேசு தேவை” துன்று கூறுவார். அவர் பக்கத்தில் யார் இருக்கிறார் என்று ஆண்ட்ரு அறிந்திருந்ததால் அவர் தைரியமாக இருந்தார்.
தன்னை கைது செய்யும்படி 50 காவலர்களை இஸ்ரவேலின் ராஜா அனுப்பின போதும் எலியா அச்சுறத்தப்படவில்லை (2 இரா 1:9). தேவன் யார் பக்கம் இருக்கிறார் என்று அவர் அறிந்து அந்த 50 காவலாளிகளை பட்சிக்கும்படி வானத்திலிருந்து அக்கினியை வரப்பண்ணினார். ராஜா மறுபடியும் அதிக காவலாளிகளை அனுப்பினான், எலியா மறுபடியும் அதையே செய்தார். மூன்றாவது முறையாக வந்த காவலாளிகளின் தலைவன் தங்களை விட்டுவிடும்படி எலியாவை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான். எலியா அவர்களை பார்த்து பயந்ததை விட அவர்கள் எலியாவை பார்த்து பயந்தது தான் அதிகம் எனவே தேவதூதன் எலியாவை அவர்களுடன் போவது பாதுகாப்பானது என்று கூறினான். (வச 13-15)
நமது எதிராளிகள் மீது அக்கினியை வரவழைக்க இயேசு விரும்புவதில்லை. அவரது சீஷர்கள் ஒரு சமாரிய கிராமத்தின் மேல் தாங்கள் அக்கினி வரவழைக்கிறோம் என்று கேட்டபோது, இயேசு அவர்களை அதட்டினார் (லூக்கா 9:51-55). நாம் வேறு ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். இருப்பினும் எலியாவை போன்று தைரியம் உள்ளவர்களாய் – எல்லா மக்களுக்காக மரித்த இரட்சகரை பற்றி கூற தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அது ஒரு தனி நபராக நாம் 50 பேருக்கு சமமாக நிற்பது போன்று இருக்கும் ஆனால் உண்மையில் அது ஒருவரான தேவனே நிற்பது. மற்றவர்களிடம் தைரியமாக அன்பு காட்ட என்ன தேவையோ அதை இயேசு தருகிறார்.
நாம் தைரியமாக இருக்க இயேசு நமக்கு தேவையானதை எப்படி தருகிறார் ? நீங்கள் எதை தெரிந்து கொண்டு செயல் பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?
பரிசுத்த ஆவியானவரே, என்னில் வாழ்வதற்கு நன்றி. இயேசுவை பற்றி மற்றவர்களிடம் கூற என்னை தைரியத்தினால் நிரப்பும்.