எனது வீட்டின் அருகே உள்ள வீட்டு-மேம்பாட்டு கடையில் ஒரு பெரிய பச்சை நிற பொத்தான் ஒன்று உண்டு. வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் அதை அழுத்தலாம். அதை அழுத்திய ஒரு நிமிடத்துக்குள் உதவுவதற்கு யாரும் வரவில்லையென்றால் வாங்கும் பொருட்களில் ஒரு தள்ளுபடி கிடைக்கும்.
இதை போன்ற சூழ்நிலையில் வேகமாக கவனிக்கப்படும் வாடிக்கையாளராக இருக்க நமக்கு பிடிக்கும். ஆனால் சேவை செய்ய வேண்டியது நாமாக இருந்தால் அது நமக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும். நம்மில் அநேகர் நம் வேலைகளை மிகவும் விரைந்து அதிக மணி நேரம் வேலை செய்து மிகவும் சுருக்கமான நேரத்திற்குள் அதிக வேலையை முடிக்கும் கட்டாயத்திற்குள்ளாக அழுதப்படுகிறோம். ஒரு அவசரமான வாழ்க்கை முறைக்குள்ளாக அது செல்கிறது.
தேவன் இஸ்ரவேலருக்கு ஓய்வு நாளை கடைபிடிக்க கட்டளையிட்ட போது ஒரு முக்கிய காரணத்தை அறிவித்தார். “எகிப்தில் அடிமையாய் இருந்ததை மறந்து விடாதீர்கள்” (யாத் 5:15). அடிமைகளாக பார்வோன் நியமித்த குறுகிய காலத்துக்குள் வேலைகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது விடுதலை பெற்றதால், தாங்களும் தாங்கள் சேவை செய்தவர்களும் ஓய்வு எடுக்க ஒரு முழு நாளை ஆண்டவர் கட்டளையிட்டார். தேவனுடைய ஆட்சியில் சோர்வடைந்து வேலையினால் மூச்சுத்திணறும்படி யாரும் இருக்க கூடாது.
எந்த நேரங்களில் சோர்வடையும் வரை அல்லது உங்களை காத்திருக்க செய்யும் மக்களிடம் எப்பொழுதெல்லாம் வேலை செய்து இருக்கிறீர்கள் ? நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேலை இடைவெளி கொடுப்போம். விரைந்து வேலை செய்யும் கலாச்சாரம் பார்வோனுடையது, நம் தேவனுடையது அல்ல.
அதிக வேலை செய்ய வரும் உந்துதலை எப்படி தவிர்ப்பது ?
இந்தவாரம் உங்களை காத்திருக்க செய்பவர்களிடம் எவ்வாறு பொறுமையாக இருப்பீர்கள்?
ஓய்வுநாளின் தேவனே, நான் முழுமை அடையும்படி ஓய்வு எடுக்க எனக்கு கட்டளையிட்டதற்கு நன்றி.