சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த ஒரு தம்பதியினருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தங்கள் ஊரிலே வசித்து வந்தார். அநேக முறை இயேசுவின் அன்பைக் குறித்து அவருக்கு பகிர்ந்து வந்தனர். அவரின் இரட்சிப்பையும் குறித்து அவருக்கு அறிவித்து வந்தனர். இப்படிப்பட்ட மிகப் பெரிய உண்மையை உணர்ந்தும் தம் வாழ்க்கையை வேறொரு மதத்தின் நிமித்தம் விசுவாசத்திற்கு தம்மை ஒப்புக்கொடுக்க தயங்கினார். சிறிதளவு அவர் பண ரீதியாகவும் யோசித்தார். தாம் வழிபடும் மதத்தின் ஒரு தலைவராக இருந்தபடியால் பணப்பற்றாக்குறை தயக்கமும் அவர் மத சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் மரியாதை விடும் என்ற பயமும் இருந்தது.
வருத்தத்துடன் அந்த தம்பதியினிரடம் “ஓடுகிற நதியில் கைகளைக் கொண்டு மீன் பிடிப்பவனைப் போல் இருக்கிறேன். சிறிய மீன் ஒன்றை பிடித்து விட்டிட்டேன், ஆனால் பெரிய மீன் ஒன்று போவதைப் பார்க்கிறேன். அந்த பெரிய மீனை பிடிப்பதற்கு இந்த சிறிய மீனை நான் விட வேண்டியதாய் இருக்கிறது.!”
மத்தேயு 19-ல் இருக்கும் அந்த பணக்கார வாலிபனும் இதே போல் ஒரு சூழ்நிலையில் தான் காணப்பட்டான். இயேசுவிடம் வந்து “நித்திய ஜீவனை பெற நான் என்ன செய்ய வேண்டும்?” (வச 16) என்று கேட்க்கும்போது ஆர்வத்துடன் கேட்பது போல் இருந்தாலும் தன ஜீவனை முழுமையாக இயேசுவிடம் ஒப்படைக்க மனதில்லை. அவன் பணத்தில் மாத்திரம் ஐஸ்வர்யாவானாக இருக்கவில்லை, தம் வழிமுறைகளை கடைப்பிடிப்பதில் மிகவும் பெருமை உடையவனாய் இருந்தான்.நித்திய ஜீவனை அடைய வாஞ்சித்தாலும், இயேசுவை வெறுத்து மற்றவைகளை நேசித்தவனாக காணப்பட்டான்.
தாழ்மையுடன் நம் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்து, அவர் நமக்களித்த இலவச இரட்சிப்பை ஏற்றுக்கொண்டால், “என்னை பின்பற்றி வா” என்று அழைக்கிறார்.
இரட்சிப்பையும் நித்திய வாழவையும்பெறும்படி இயேசு நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்? முழுமையாக அவருக்கு உங்களை ஒப்புக்கொடுக்கும் படி உங்களை தடை செய்வது எது?
அன்பான தேவனே, என் பாவத்திற்கு பரிகாரமாக உம் மகனை இவ்வுலகத்திற்கு அனுப்பியதற்கு நன்றி என்னை முழுமையாக உம்மைக்கு அர்ப்பணிக்க எனக்கு உதவும்