“கடவுள் எங்கே வாழ்கிறார் என்று எனக்கு தெரியும்” என்று என் நான்கு வயது பேரன் என் மனைவி கேரியிடம் கூறினான். “அது எங்கே ?” என்று ஆர்வத்துடன் அவள் கேட்டாள். “உங்கள் வீட்டின் அருகில் உள்ள காட்டு வெளியில் ஆவர் வாழ்கிறார்” என்று என் பேரன் கூறினான்.
அவர்கள் இருவரும் உரையாடியதை பற்றி கேரி என்னிடம் கூறி அவனுடைய சிந்தனையை எது தூண்டியது என்று ஆச்சரியப்பட்டாள். “எனக்கு தெரியும்” என்று நான் கூறினேன். “அவன் சென்ற முறை வந்திருந்தபோது நாங்கள் அருகிலுள்ள காட்டு வெளியில் நடந்து சென்றோம். அப்பொழுது அவனிடம், நாம் தேவனை காண முடியாவிட்டாலும் அவர் செய்திருப்பவைகளை நாம் காணலாம்.” “நான் ஏற்படுத்துகிற கால் சுவடுகளை உன்னால் பார்க்க முடிகிறதா?” என்று அந்த நதியின் மணலான பகுதியில் நடந்து செல்லும் போது என் பேரனிடம் கேட்டேன். “இந்த மிருகங்களும் மரங்களும் நதியும் தேவனின் கால் சுவடுகள். அவர் படைத்தவற்றை காணும்போது அவர் இங்கே இருக்கிறார் என்பதை நாம் அறியலாம்.”
104-ஆம் சங்கீதத்தை எழுதியவரும் படைப்பில் தேவன் இருக்கும் ஆதாரங்களை சுட்டிக்காட்டி, ஆச்சரியத்துடன் “ கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது” என்று கூறுகிறார் (வச 24). இங்கே காணப்படும் ஞானத்திற்கான எபிரேய வார்த்தை திறமையான கைவினைத்திறனை விவரிக்க வேதாகமத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையில் தேவனின் கைவேலை அவர் இருப்பதை பறைசாற்றி அவரை துதிக்க விரும்ப செய்கிறது.
சங்கீதம் 104 “என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி” என்ற வார்த்தைகளில் தொடங்கி நிறைவடைகிறது (வச 1, 35). ஒரு குழந்தையின் கையில் இருந்து ஒரு கழுகின் கண் வரை, நம்மைச் சுற்றியுள்ளவைகள் நம் சிருஷ்டிகரின் கலைத்திறனையும் அவருடைய முழுமையான திறமையைப் பற்றியும் பேசுகிறது. அவை எல்லாவற்றையும் இன்று நாம் ஆச்சரியத்துடன் எடுத்துக் கொள்வோம் – அதற்காக அவரைத் துதிப்போம்!
படைப்பில் தேவனின் கைவேலைகளை நீங்கள் எங்கே பார்க்கிறீர்கள்? இன்று அதனையம் தேவனையும் வேறொருவரிடம் நீங்கள் எவ்வாறு சுட்டிக்காட்ட முடியும்?
தேவனே நீர் படைத்த எல்லாவற்றிற்காகவும் உம்மை துதிக்கிறேன்! உம்முடைய ஞானத்தையும் நன்மையையும் கண்டு ஆச்சரியத்துடன் வாழ இன்று எனக்கு உதவும்.