குளிர் நிறைந்த ஒரு இரவு நாளில், ஒரு யூத குடும்ப வீட்டின் ஜன்னல் ஒன்றின் மீது கல் எறியப்பட்டது. தாவீதின் நட்சத்திரமானது அந்த ஜன்னலில் தொங்கவிடப்பட்டிருந்தது. யூதர்களின் ஒளியின் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஹானுக்கா-வை முன்னிட்டு மெனோரவும் (யூத விளக்குத்தண்டு) வைக்கப்பட்டிருந்தது. சில ஆயிரம் மக்கள் வசித்து வந்த இந்த சிறிய அமெரிக்க நகரத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் – அவர்கள் அந்த வெறுப்பு நிறைந்த செயலுக்கு இறக்கத்துடன் பதிலளித்தார்கள். அவர்கள் அருகில் வாழ்ந்து வந்த யூதர்களின் வலியிலும் பயத்திலும் பங்கேற்க்கும் வண்ணமாக, மெனோராக்களின் படங்களை தங்கள் வீடுகளின் ஜன்னல்களில் ஒட்டினார்கள்.

நம் இரட்சகராகிய இயேசு நமக்காக தம்மை தாழ்த்தி நம்மோடு வாழும்படி (யோ 1:14) வந்ததால் விசுவாசிகள் ஆகிய நாமும் பெரிதான இரக்கத்தை பெற்றவர்களாய் இருக்கிறோம். நமக்காக “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்,.. தம்மை வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்தார்” (பிலி 2:6-7). நான் அழும்போது நம்மோடு அவரும் அழுது, நம்மை காக்கும் படி நமக்காக சிலுவையில் மரித்தார்.

தேவனுடைய அக்கறைக்கு அப்பால் நமக்கு எந்த சோதனையும் நேரிடாது. நம்மீது யாராவது ‘கல்லெறிந்தால்’ அவர் நமக்கு ஆறுதலாய் இருப்பார், வாழ்க்கை நமக்கு ஏமாற்றங்களை கொண்டு வந்தால் நம்மோடு அந்த கஷ்டத்தில் நடக்கிறார் (சங் 138:6). சோதனையில் நம்மை தப்புவித்து நம் பயங்களுக்கு நம்மை தப்புவிக்கிறார். உம் இரக்கம் நிறைந்த அன்பிற்காக நன்றி, தேவனே.