எனது பிறந்த நாள் விழாவில் எனக்குத்தரப்பட்ட பரிசுகளை எனது நண்பர்களுடன் நான் திறந்து பார்க்க தொடங்கினேன். அநேக இனிப்புகளும் சிறிய விளையாட்டு பொருள்களும், அழகான கலை பொருள்களும் இருந்தன. அனைத்திலும் வித்தியாசமான ஒன்றாக காகிதத்தில் செய்யப்பட்ட கிரீடங்கள் இருந்தன. நாங்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவைகளைப் பெற்றுக் கொண்டோம். சந்தோஷத்துடன் எங்கள் நேரத்தை ராஜாவும் ராணியும் ஆக எங்கள் வீட்டில் கழித்தோம்.
இதன் மூலமாக நாம் அதிகம் நினைத்துப் பார்க்காத ஒரு வாக்குத்தத்தம் ஒன்று என் நினைவிற்கு வருகிறது. பவுல் சொல்லுகிறது போல் நம் மறுவாழ்வில் நாம் இயேசுவோடு அரசாளுவோம். 1 கொரிந்தியர் 6ல் ‘உலகம் உங்களால் நியாந்தீர்க்கப்படும்’ என்று பவுல் நமக்கு இருக்கிறதான சலுகையின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறார். அதை விசுவாசிகள் ஆகிய நாம் மனதில் வைத்துக்கொண்டு இப்பூமியில் அனைத்தையும் சமாதானமாய் எடுத்து செல்ல வேண்டுமென்று ஊக்குவிக்கிறார்.
பரிசுத்த ஆவிக்கு நாம் இடம் கொடுத்தோம் ஆனால், சமாதானத்தை உண்டு பண்ணுகிற சுயகட்டுப்பாடு, பொறுமை, நிதானம் ஆகியவற்றை நமக்குள் பிறப்பிக்க பண்ணுவார்.
பரிசுத்த ஆவியின் சித்தத்தை நமக்குள் நிறைவேற்றி இயேசுகிறிஸ்து பூமிக்கு திரும்பின உடன் நாம் நமக்கென்று ஒப்புவிக்கப்பட்ட ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் தேவ ராஜ்ஜியத்தில் அரசாளும் (வெளி 5.10). தங்க கிரீடத்தில் வைக்கப்பட்டுள்ள வைரத்தைப் போல வேதாகமத்தில் பிரகாசிக்கும் இந்த வாக்குத்தத்தத்தை பற்றிக்கொள்வோம்.