ரெபேக்கா தனது சகோதரனின் குடும்பத்தை குறித்து மிகவும் கவலை கொண்டு இருந்தால், கணவன் மனைவி இடையிலான பிரச்சனை முடிவடைய வேண்டும் என்று தேவனிடம் உருக்கமாய் ஜெபித்து வந்தால், ஆனால் சில நாட்களில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். அவரது மனைவி குழந்தைகளை வேறொரு ஊருக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

ரெபேக்கா மிகவும் அன்போடு நேசித்த அந்த குழந்தைகளை மறுபடி பார்க்க முடியவில்லை. சில வருடங்களுக்கு பிறகு அவர்கள் கூறியது என்னவென்றால் இந்த கவலையை எனக்குள்ளாக அதிக நேரம் வைத்ததினால் எனக்குள்ள ஒரு கசப்பான வேறொன்று வளர்ந்து என்னை சுற்றி இருக்கும் நண்பர்களையும், குடும்பத்தார்களையும் பாதித்தது. அனைவருக்கும் பரவ ஆரம்பித்தது.
இதேபோல் வேதாகமத்தில் ரூத் என்னும் புத்தகத்தில் நகோமி என்னும் பெண்ணின் இருதயமும் துக்கத்தினால் பரவக்கூடிய கசப்பாக மாறியது என்று பார்க்கிறோம். தூர தேசத்தில் தன் கணவனை இழந்து 10 வருடம் பிறகு தன் இரு மகன்களையும் இழந்தவளாக தன் இரு மருமகளாகிய ரூத் மற்றும் ஓர்பாளுடன் ஆதரவற்றவளாய் கைவிடப்பட்டால் (1:3-5). நகோமி தன் மருமகளுடன் தனது தேசத்திற்கு திரும்ப செல்லும் போது தன் தேச மக்கள் அனைவரும் மிகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவளோ அவர்கள் அனைவரிடம் “நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல் மாராள் என்று சொல்லுங்கள்; சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார்” (20) என்று துக்கத்தோடுச் சொன்னாள்.
உலகத்தில் அனைவருக்கும் துக்கங்களும், ஏமாற்றங்களும் உண்டு. அதன் நிமித்தம் நாம் கசப்புள்ளவர்களாய் மாறும்படி தூண்டப்படுகிறோம். சில வேளைகளில், நம் இருதயம் புண்படும்படி யாரேனும் ஏதாவது பேசினால் கூட அப்படி ஆகலாம் அல்லது நம் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படாமல் போனால் அது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நம் இருதயத்தின் கசப்பான வேர்களை பிடுங்கிப் போடும் நம் தேவனிடம், நாம் இவைகளை ஒப்புக் கொள்ளும் போது அவர் அதை ஆனந்த இருதயமுள்ள ஆவியாக மாற்றிவிடுவார்.