“சில நேரங்களில் நான் யாருக்கும் காணப்படாதவனாயும், அறியப்படாதவனைப் போலவும் உணருகிறேன் .ஆனால் தேவன் என்னை உபயோகிக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன்.

நான் சென்றிருந்த உணவகத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த அண்ணனிடம் பேசின போது தான் தெரிந்தது ஆச்சரியப்படும் விதமான சாட்சி அவர்களிடம் இருந்து .அவர்கள் சொன்னது என்னவென்றால் போதை பழகத்திற்கும் விபச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தேன் வீடு இல்லாமல் வீதிகளில் வாழ்ந்து வந்தேன் ஆனால் இவைகளை விட்டு தேவனை பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அறிந்து சில வருடத்திற்கு முன்பு ஒருநாள் முழங்கால்படியிட்டு அவர் பாதத்தில் விழுந்தேன் அவரோ என்னை எல்லா கட்டுக்களிலிருந்து விடுவித்தார் .

தேவன் அவர்கள் வாழ்வில் செய்த அற்புதத்தை சாட்சியாக என்னிடம் பகிர்ந்ததினால் அவர்களுக்கு நன்றி செலுத்தினேன். அந்த சாட்சியின் மூலம் நம் தேவன் ஒருவரின் வாழ்வை எவ்வளவு தூரம் மாற்ற முடியும் என்பதையும் அது எனக்கு செய்த கிரியையினால் தேவன் அவர்களை உபயோகப்படுத்தினார் என்று அவர்களிடம் கூறினேன்.
மற்றவர்கள் தவறாக எண்ணக் கூடிய நபர்களை கொண்டும் தேவன் தம் சித்தத்தை நிறைவேற்றுகிறார் அப்போஸ்தலர்களில் அந்திரேயாவை விட அனைவருக்கும் தன் சகோதரரான பேதுருவை தான் அதிகம் தெரியும் ஆனால் யோவான் புஸ்தகத்தில் நாம் வாசிப்பது என்னவென்றால் பேதுருவை மேசியாவிடம் அழைத்து வந்தது அந்திரேயா தான் (யோவா. 1:41-42).

அந்திரேயா மூலமாகத்தான் பேதுரு இயேசுவை சந்தித்தான். யோவானுடைய சீஷனாக இருந்த அந்திரேயா இயேசுவைப் பற்றி அறிந்தவுடன் உடனடியாக அவரை விசுவாசித்து பின் தொடர்ந்து தன் சகோதரனுக்கும் அறிமுகப்படுத்தினான் அந்திரேயாவின் தாழ்மையான விசுவாசமானது உலகை உலுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .

தேவன் உண்மையுள்ள ஊழியத்தை காணப்படுகிறார் நாம் எங்கு இருந்தாலும் யாரும் பார்க்கவில்லை என்றாலும் அவர் நம்மை உபயோகப்படுத்த முடியும் .