சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கல்லூரியின் கால்பந்து வீரர்களுக்கு இயேசுவைபற்றி பிரசங்கிக்கும்படியாக அழைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் பொதுவாக கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளவர்கள் என்று அனைவரும் அறிவார்கள்.  அதின் நிமித்தமாக கூட எனது நண்பரையும் அழைத்து சென்றேன். நான் அங்கு அழைக்கப்பட்ட நாளிலே அவர்கள் தங்கள் கோப்பையை வென்ற நாளாக இருந்தது. அதினால் நாங்கள் கூடியிருந்த அறை முழுவதும் ஆரவாரமும் கொண்டாட்டமும் நிறைந்திருந்தது. இதன் நடுவில் மாணவ தலைவன் எழுந்து ” கடவுளைக்குறித்து இருவர் உங்களிடம் பகிரும்படி வந்திருக்கிறார்கள்” என்று அறிமுகப்படுத்தினார்.

நடுக்கத்துடன் எழுந்துபோய் தேவ அன்பை குறித்து பகிர துடங்கினேன். மெய்மறந்த ஆர்வத்துடன் அனைவரும் கவனித்தார்கள். முடிவில் சில வெளிப்படையான நேரடி கேள்விகள் என்னிடம் கேட்டார்கள்.நாளடைவில் அங்கு வேதபாடம் நடத்தும்படி தேவன் எங்களை வழிநடத்தினார். அதினிமாதமாக பலர் அங்கு இரட்சிக்கப்பட்டார்கள்.

இதைக்குறித்து நினைக்கும்போது “சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்” (லூக். 10:18) என்கிற வசனம் நினைவுக்கு வந்தது. சமயங்களில் நான் முகம் குப்புற விழுந்து தேவனை அவ்வாறு பணிந்து கொண்டேன்.

லூக்கா 10-ஆம் அதிகாரத்தில், சீஷர்கள் தங்கள் ஊழிய பனியின் சாதனைகளை குறித்து இயேசுவிடம் வந்து அறிக்கையிட்டார்கள். அவர்கள் முழுமையாக பல ஆத்துமாக்கள் ராஜ்யத்தின் ரகசியத்தை  அறிந்தார்கள், பல அசுத்த ஆவிகள் துரத்தப்பட்டது, நோய்கள் குணமாக்கப்பட்டது. ஆனால் இவைகளை இயேசுவிடம் அவர்கள் சொல்லும்போது இதற்கு மாறாக பதிலளித்தார் “ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்” (வச. 20).

நாமும் சமயத்தில் வெற்றியினால் சந்தோஷப்பட்டு தோல்வியினால் மனங்கசந்து போகிறோம். தேவன் நமக்கென்று நியமித்த பணியை தொடர்ந்து செய்து அதன் முடிவை அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். உங்கள் பெயர் அவர் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.