சில காலங்களாக நான் ஒரு இள வயதான மனிதனிடம் கடிதங்கள் பரிமாறிக் கொண்டு இருந்தேன். விசுவாசத்தை பற்றி ஆழமாக சிந்திப்பவன். ஒருமுறை அவன் எழுதினான்: “நாம் வரலாற்றின் காலவரிசையில் இவ்வளவு சிறியவர்களாக இருக்கிறோமே! நாம் ஒரு பொருட்டா?”
இஸ்ரவேலுடைய தீர்க்கதரிசியான மோசே இந்த கேள்வியை ஒத்துக் கொள்வார்: “எங்கள் ஆயுசுநாட்கள் சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்” (சங்கீதம் 90:10). நம்முடைய குறுகிய வாழ்க்கையானது நம்மை வருத்தத்திற்குள்ளாக்கி, நாம் ஒரு பொருட்டா என்று எண்ணச் செய்யும்.
ஆம், நாம் ஒரு பொருட்டு தான். ஏனென்றால் நாம் தேவனால் ஆழமாக, நித்தியமாக நேசிக்கப் படுகிறோம். மோசே இந்த சங்கீதத்தில் ஜெபிக்கிறார்: “எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்” (சங்கீதம் 90:14). நாம் முக்கியம் தான், ஏனென்றால் நாம் இறைவனுக்கு கருத்தாக இருக்கிறோம்.
மற்றும், மற்றவர்களுக்கு நாம் தேவனின் அன்பை காண்பிக்க கூடியவர்களாக இருக்கிறது, நாம் ஒரு பொருட்டு தான் என்று வெளிப்படுத்துகிறது. நம்முடைய வாழ்க்கை குறுகியதாக இருந்தாலும் அது அர்த்தமற்றது அல்ல; தேவனின் அன்பை நாம் மற்றவருக்கு வைத்து போகக்கூடும். இந்த உலகில் நாம் நன்றாக சம்பாதித்து, ஓய்வு பெற்று சுகமாக வாழ்வதற்காக அல்ல. தேவனுடைய அன்பின் மூலம் அவரை மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவே.
இன்னுமாக, இந்த வாழ்வு ஒரு குமிழி போல் இருந்தாலும், நாம் நித்திய வாசிகள். இயேசு மரித்ததிலிருந்து எழுந்ததினால் நாமும் நிச்சயமாக நித்தியத்தில் வாழ்வோம். ஆகவே தான் மோசே “காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்” என்று வரியினால் நம்மை ஊக்குவித்தார். அந்த ‘காலையிலே’ நாம் எப்பொழுதும் வாழ்வோம். அன்பு கூறுவோம். அன்பினால் மூழ்கடிக்கப்படுவோம். இந்த காரியம் நாம் முக்கியம் தான் என்று உணர்த்தவில்லை என்றால் வேறு என்னதான் அப்படி செய்ய கூடும்?
உங்கள் வாழ்வும் ஒரு பொருட்டு என்று வியந்து எப்பொழுது நீங்கள் போராடியிருக்குறீர்கள்? சங்கீதம் 90 எப்படி உதவுகிறது?
நான் உமக்கு முக்கியமாக இருப்பதினால் உமக்கு நன்றி. மற்றவர்களுக்கு உம்மை பகிர்ந்து கொள்ள உதவும்.