“நான் வேதாகமத்தை தொட்டால், என்னுடைய கரத்தில் அது தீப்பிடித்துக்கொள்ளும்” என்று என்னுடைய கல்லூரி பேராசிரியர் கூறினார். என்னுடைய இதயம் கனத்தது. அந்தக் காலை வேளையில் நாங்கள் படித்த ஒரு நாவலில் வேதத்திலுள்ள ஒரு வசனம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் வாசிக்கும்படியாக நான் என் வேதத்தை எடுத்தப்போது அவர் கவனித்து இப்படியாக கருத்து தெரிவித்தார். என்னுடைய பேராசிரியர் தான் மன்னிக்கப்படுவதற்கு முடியாத ஒரு மகா பெரிய பாவியாயிருப்பதாக உணர்ந்தார். இருந்தாலும் தேவனின் அன்பையும் – நாம் எப்போதும் தேவனின் மன்னிப்பிற்காக அவரை நாடமுடியும் என்று வேதாகமம் கூறுகிறது என்றும் அவரிடம் சொல்வதற்கு எனக்கு தைரியமில்லை.
நெகேமியாவில் மனந்திரும்புதலைப்பற்றியும் மன்னிப்பைப்பற்றியும் உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலர்கள் அவர்களுடைய பாவங்களினிமித்தம் நாடு கடத்தப்பட்டனர், ஆனால் இப்பொழுது அவர்கள் எருசலேமிற்கு திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு குடியேறியப் போது, வேதப்பாரகனாகிய எஸ்ரா நியாயப்பிரமாணத்தை வாசித்தார். (நெ. 7:73-8:3). அவர்கள் பாவிகளாயிருந்தாலும் தேவன் அவர்களை கைவிடவில்லை என்று நினைவுகூர்ந்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர் (9:17,19). அவர்கள் கூப்பிட்டப்போது அவர் கேட்டு, அவருடைய மிகுந்த இரக்கத்தின்படி அவர்களோடு பொறுமையாயிருந்தார் (வச. 27-31).
இதேப்போன்று, தேவன் நம்மிடத்திலும் பொறுமையாயிருக்கிறார். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் திரும்பினால் அவர் நம்மை கைவிடமாட்டார். என்னுடைய பேராசிரியரிடம் சென்று அவருடைய பழைய வாழ்க்கை எப்படியிருந்தாலும் இயேசு அவரை நேசிக்கிறார் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருக்க விரும்புகிறார் என்றும் சொல்ல ஆசைப்படுகிறேன். உங்களைக் குறித்தும் என்னைக் குறித்தும் இயேசு அப்படியே கருதுகிறார். நாம் அவரிடம் மன்னிப்பிற்காக நெருங்கினால் அவர் நம்மை மன்னிப்பார்.
இயேசு அவர்களை மன்னிக்க முடியாத பாவியாய் இருக்கிறதாக உணருகிற யாராவது உங்களுக்குத் தெரியுமா? இயேசு நீதிமான்களுக்காக அல்ல பாவிகளுக்காகவே வந்தார் என்ற சத்தியம் (மாற். 2:17) இப்படிப்பட்ட உணர்வுள்ளவர்களிடம் எப்படிப் பேசுகிறது?
அன்புள்ள தேவனே, என்னுடைய பாவங்களை மன்னித்ததற்காகவும், நான் யாரும் மன்னிக்கக்கூடாத பாவியல்ல என்று உறுதியளித்ததற்காகவும் நன்றி.
கிறிஸ்தவ வாழ்க்கையில் மன்னிப்பைக் குறித்து அதிகமாகத் தெரிந்துக்கொள்ள christianuniversity.org/sf107 என்ற தளத்தை பார்வையிடவும்.