2012 ஆம் ஆண்டு, அமெரிக்கன் இசைக் குழுவினர் “Tell Your Heart to Beat Again”( உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்) என்ற ஒரு புதிய பாடலை வெளியிட்டனர். இந்தப் பாடல் ஓர் இருதய மருத்துவரின் உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஒரு நோயாளியின் இருதயத்தைச் சரிசெய்யும்படி, அதனை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கின மருத்துவர், அதைச் சரிசெய்தபின்னர், அதனை, அதனுடைய இடத்தில் நெஞ்சில் பொருத்தினார், மெதுவாக அதனை அமுக்கி செயல்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த இருதயம் செயல்படவில்லை. கடுமையான முயற்சிகளை எடுத்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை. கடைசியாக, அவர் அந்த மயக்க நிலையிலிருந்த நோயாளியின் அருகில் முழங்காலிட்டார், அவளிடம் பேசினார், “ மிஸ்.ஜாண்சன், நான் உன்னுடைய மருத்துவர் பேசுகின்றேன், இந்த அறுவை சிகிச்சை நன்றாக முடிந்து விட்டது, உன்னுடைய இருதயம் சரிசெய்யப் பட்டது, இப்பொழுது உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்” என்றார். அவளுடைய இருதயம் துடிக்க ஆரம்பித்தது.
நம்முடைய இருதயத்திற்கு கட்டளை கொடுக்க முடியும் என்ற எண்ணம் சற்று வினோதமாக காணப்படலாம், ஆனால் அது ஆவியோடு இணைக்கப்பட்டுள்ளது. “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?……தேவனை நோக்கிக் காத்திரு” (சங். 42:5) என்று சங்கீதக் காரன் தனக்குள்ளாக கேட்கின்றான். மற்றொரு இடத்தில், “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பறுதலுக்குத் திரும்பு” (116:7) என்கின்றார். யுத்தத்தில் இஸ்ரவேலரின் எதிரிகளை தோற்கடித்தபின்னர், நியாயாதிபதியான தெபோராள், யுத்த வேளையில், அவளும் தன்னுடைய இருதயத்தோடு பேசியதாக வெளிப்படுத்துகின்றாள். “என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய்” (நியா.5:21) என்று தன்னுடைய இருதயத்தை திடப்படுத்தினாள், ஏனெனில் தேவன் அவளுக்கு வெற்றியைக் கட்டளையிட்டார் (4:6-7).
நம்முடைய வல்லமையான மருத்துவராகிய தேவன், நம்முடைய இருதயத்தையும் திருப்புகின்றார் (சங்.103:3). பயம், மன அழுத்தம் அல்லது குற்ற உணர்வு நம்முடைய இருதயத்தினுள் வரும் போது, நாமும் நம் ஆத்துமாவை நோக்கி, தைரியமாக இரு, வலிமை இழந்த இருதயமே, மீண்டும் துடி என்று சொல்வோமாக.
மிகப் பெரிய மருத்துவராகிய தேவனே, என்னுடைய சோதனைகள், யுத்தத்தின் போது, என்னோடு இருப்பதால் உமக்கு நன்றி கூறுகின்றேன். நீர் என்னோடு இருப்பேன் என்று வாக்களித்துள்ளதால், என் ஆத்துமாவை தைரியமாக செயல் படச் சொல்வேன்.