அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைகழகத்தில், பட்டமளிப்பு விழா  நடைபெற்ற போது, அங்கிருந்த மொத்த கூட்டமும் தெரிவித்த பதிலை அதிர்ந்தது என்ற ஒரே வார்த்தையால் வெளிப்படுத்தலாம். அந்த பட்டமளிப்பு விழாவின் துவக்க பேச்சாளர், பட்டம் பெறும் அந்த வகுப்பிலுள்ள அனைத்து மாணவரின் கடன்களை, லட்சக்கணக்கான டாலர்களைத் தள்ளுபடி செய்ய, தானும் தன்னுடைய குடும்பத்தினரும் சேர்ந்து, அதனை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். மகிழ்ச்சியில் மூழ்கி, கண்ணீரோடும், ஆரவாரத்தோடும் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்த கூட்டத்தில், ஒரு லட்சம் டாலர்கள் (72 லட்சம் ரூபாய்) கடன் வைத்திருந்த ஒரு மாணவனும் இருந்தான்.

 “உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து  முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாக” இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தின பின்பு, யோவான், அவர்  நிறைவேற்றின கடன் தள்ளுபடி வேலையைப் பற்றி எழுதுகின்றார். “நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினவரை” ஆராதிக்கின்றார் (வெளி. 1:6). இந்த வார்த்தைகள் மிக எளிமையாக இருந்தாலும், அதன் அர்த்தம் மிக ஆழமானது.    மோர்ஹவுஸ்ஸில் பட்டம் பெற்ற மாணவர்கள் கேட்ட நற்செய்தியைக் காட்டிலும் சிறந்த செய்தி, இயேசு கிறிஸ்துவின் மரணத்தினால் (சிலுவையில் சிந்தின இரத்தத்தினால்), நம்முடைய பாவச் செயல்களுக்கும், பாவ ஆசைகளுக்கும், பாவ உணர்வுகளுக்கும் உள்ள தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டு நம்மை அவர் விடுவித்தார். நம்மீது இருந்த கடன் தீர்ந்த்தால், யாரெல்லாம் இயேசுவை விசுவாசிக்கின்றார்களோ அவர்களின் பாவமெல்லாம் மன்னிக்கப் பட்டு, தேவனுடைய இராஜியத்தின் குடும்பத்தில் நாம் இணைகின்றோம். இந்த நற்செய்தி தான், எல்லா நற்செய்திகளிலும் மிகச் சிறந்தது!