“நான் அவரைப் பாதுகாக்கின்றேன், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் போது நானும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றாள் ஸ்டெல்லா. “அவள் என்னருகில் இருக்கும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றார் பிரதீப். ஸ்டெல்லாவும் பிரதீப்பும் திருமணமாகி 79 ஆண்டுகள் ஆகின்றது. சமீபத்தில் பிரதீப் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டபோது, அவரது நிலை மிகவும் மோசமாக இருந்தது, எனவே, ஸ்டெல்லா அவரை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்தாள். அவருக்கு வயது 101, அவளுக்கு 95. அவள் ஒரு நடைகருவியை பயன்படுத்தி நடந்தாலும், அவருக்குப் பிடித்தமான உணவு தயாரித்தல் போன்ற, தன்னால் இயன்ற உதவியை, தன்னுடைய கணவனுக்குச் செய்து வந்தாள், அதையும் அவளால் தனிமையாகச் செய்யமுடியவில்லை. பேரப்பிள்ளைகளும், அருகில் இருப்போரும் அவளுக்கு உதவி செய்தனர்.
ஸ்டெல்லா, பிரதீப் ஆகியோரின் இணைந்த வாழ்க்கை, ஆதியாகமம் 2 ல் கூறப்பட்டுள்ள “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” (வ.18) என்று தேவன் கூறியதற்கு ஏற்ப அமைந்துள்ளது. ஆதாமுக்கு முன்பாக தேவன் கொண்டு வந்த அவருடைய படைப்புகளில் எந்த உயிரினமும் இந்த வார்த்தைக்கு ஏற்ப அமையவில்லை. ஆனால், அவனுடைய விலா எலும்பிலிருந்து உண்டாக்கப்பட்ட ஏவாளைத் தனக்கு ஏற்ற துணையாகவும் உதவியாளருமாகக் கண்டான் (வ.19-24).
ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாள் அமைந்தாள், இவர்கள் மூலமாக தேவன் திருமணத்தை ஏற்படுத்தினார். இது, ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்காக மட்டுமல்ல, ஒரு குடும்பத்தை தொடங்கவும், அவருடைய படைப்புகளைப் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டது. இதில், மற்ற மக்களும் அடங்குவர் (1:28). அந்த முதல் குடும்பத்திலிருந்து சமுதாயம் உருவானது, திருமணம் ஆனவர்கள், தனியாக இருப்பவர், வயதானவர், இளைஞர் யாருமே தனியாக இல்லை. நாம் அனைவரும் ஒரு சமுதாயத்தினர், “ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமக்கத்தக்க” வாய்ப்பை தேவன் நமக்குத் தந்துள்ளார் (கலா. 6:2).
அன்புள்ள தேவனே, மனிதனையும் மனுஷியையும் ஒருவருக்காக ஒருவரைப் படைத்தற்காகவும் அதன் மூலம் ஒரு சமுதாயத்தை உருவாக்கினதற்காகவும், ஒருவரும் தனிமையாக இல்லை என்ற நிலையைத் தந்தற்காகவும் நன்றி கூறுகின்றேன்.