ஐக்கிய இராஜியம்(Uk) எங்கும் கத்தி குற்றங்கள் பெருகின போது, பிரிட்டிஷ் இரும்பு வேலை மையம் ஒரு திட்டத்தை வெளியிட்டது. இ ந்த மையம், உள்ளூர் காவல் துறையோடு இணைந்து, இருநூறு வைப்புப் பெட்டிகளை உருவாக்கி, தேசமெங்கும் வைத்து, பொது மன்னிப்பு பிரச்சாரத்தை வெளியிட்டது. பெயர் குறிப்பிடாமல் ஒரு லட்சம் கத்திகளை ஒப்படைத்தனர், அவற்றுள் சிலவற்றில் இன்னமும் இரத்தக் கறை இருந்தது. பின்னர் அவை கலைஞரான ஆல்ஃபி பிராட்லியிடம் கொடுக்கப் பட்டன. அவர் அவற்றின் முனைகளை மழுங்கச் செய்து, சிலவற்றில் கத்திக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளம் நபர்களின் பெயர்களைப் பதித்தார், சிலவற்றில், முன்னாள் குற்றவாளிகள் கொடுத்த, வருத்தத்தை தெரிவிக்கும் செய்திகளைப் பதித்தார். பின்னர், அனைத்து 100,000 ஆயுதங்களும் பற்ற வைக்கப் பட்டு, கத்தி தேவதை உருவாக்கப் பட்டது, இருபத்தியேழு அடி உயரம் கொண்ட இந்த தேவதை உருவம், மின்னக் கூடிய இறக்கைகளையும் கொண்டிருந்தது.
நான் இந்த தேவதை சிலைக்கு முன்பாக நிற்கும் போது, இதன் மூலம் எத்தனை ஆயிரம் காயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என வியப்படைந்தேன். ஏசாயாவின் புதிய வானம், புதிய பூமியின் தரிசனத்தை நினைத்துப் பார்த்தேன் (ஏசா. 65:17). அங்கு இளம் வயதில் பாலகர்கள் மரிப்பதில்லை (வச. 20), குற்றங்களை உருவாக்கும் ஏழ்மையில் அவர்கள் வளர்க்கப்படுவதில்லை (வச, 22-23), கத்தி குற்றங்கள் நடைபெறும் இடமாக அது இருப்பதில்லை, ஏனெனில் எல்லா பட்டயங்களும் ஆக்கப் பூர்வமான வேலைக்குப் பயன்படும் ஆயுதங்களாக மாற்றப்பட்டன (2:4).
அந்த புதிய உலகம் இங்கே இல்லை, அது வரும் வரையிலும் நாம் ஜெபிக்கவும், பணி செய்யவும் கடவோம் (மத்.6:10). தேவன் வாக்களித்துள்ள எதிர்காலத்தின் ஒரு காட்சியை அந்த கத்தி தேவதையும் ஒரு வகையில் வெளிப்படுத்துகின்றாள். பட்டயங்கள் மண் வெட்டிகளாயின, ஆயுதங்கள் கலைப் பொருட்களாயின. வேரென்ன மீட்பின் திட்டங்கள் மூலம் எதிர் காலத்தைப் பற்றிய காட்சியை இன்னும் கொஞ்சம் தர முடியும்?
தீமையை விரட்டியடிக்கும் படி, எது உன்னைத் தூண்டுகிறது?
உன்னுடைய சமுதாயத்திற்குச் சமாதானத்தைக் கொண்டுவர எவ்வாறு வேலை செய்யப் போகின்றாய்?
இயேசுவே, உம்முடைய ஆளுகையின் கீழ், இவ்வுலகம் சமாதானத்தோடு இருக்கும் காலம் வரை எங்களால் காத்திருக்க முடியவில்லை, உம்முடைய ஆவியானவர் எங்களில் கிரியை செய்து, எங்கள் சமுதாயத்தில் உம்முடைய ராஜியம் வருவதைக் காண உதவியருளும்.