பல ஆண்டுகளுக்கு முன்னர், என்னுடைய நான்கு வயது மகன், ஓர் உலோகத்தகட்டில் பதிக்கப்பட்டிருந்த மரத்தாலான இருதயம் அமைப்பு, ஒன்றினை எனக்குப் பரிசாகக் கொடுத்தான். அதின் மத்தியில் “என்றும்” என்ற வார்த்தை எழுதப் பட்டிருந்தது. “நான் என்றும் உங்களை நேசிக்கிறேன், அம்மா” என்றான். நான் அவனை நன்றியோடு அணைத்துக் கொண்டேன். “நான் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்” என்றேன். அந்த விலையேறப் பெற்ற வெகுமதி, என்னுடைய மகன் என் மீது வைத்துள்ள முடிவில்லாத அன்பைக் காட்டியது. கடினமான நாட்களில் தேவன் அந்த இனிமையான பரிசின் மூலம் என்னைத் தேற்றி, ஊக்கப் படுத்தி, அவருடைய ஆழ்ந்த அன்பு எப்போதும் எனக்குண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றார்.
என்னுடைய மகனின் பரிசின் மூலம், வேதாகமம் முழுமையிலும் கூறப்பட்டுள்ள தேவனுடைய ஈவாகிய அவருடைய மாறாத அன்பு எனக்கு என்றுமுள்ளது என்றும், பரிசுத்த ஆவியானவர் அதை உறுதிபடுத்துகின்றார் என்பதை அவர் நினைவு படுத்துகின்றார், தேவனுடைய மாறாத நன்மைகள் என்றும் நமக்குள்ளது என்பதை நன்றியோடு போற்றிப் பாடுவோம். சங்கீதக்காரனைப் போன்று, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங். 136:1) என்று பாடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய நாமத்தை உயர்த்திப் பாடுவோம் (வச. 2-3). அவருடைய அளவற்ற அதிசயங்களையும், முடிவில்லாத ஞானத்தையும் தியானிப்போம் (வ.4-5). நம்மை என்றும் நேசிப்பவரை, வானங்களையும் பூமியையும் ஞானமாய் படைத்தவரை, எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவரைத் துதிப்போம் (வச. 6-9).
சங்கீதக்காரன் பாடுகின்றது போல, என்றுமுள்ள அவருடைய கிருபையும், அன்பும் இப்பொழுது நம் வாழ்விலும் அவருடைய பிள்ளைகள் மீதும் தொடர்ந்து பொழிகின்றது.. நாம் எத்தகைய பிரச்சனைகளைச் சந்தித்தாலும் நம்மைப் படைத்தவர் நம்மோடிருந்து, நம்மை பெலப் படுத்தி, நம்மை நிபந்தனையற்று முற்றிலும் நேசிக்கிறேன் என்கின்றார், தேவனே, வாழ்வை மாற்றும் உம்முடைய மாறாத அன்பினைக் குறித்து எங்களுக்கு அநேகம் முறை நினைவு படுத்துவதற்காக நன்றி கூறுகின்றேன்.
தேவன் உன் மீது அன்பாயிருக்கிறார் என்பதை எவ்வாறு உறுதிபண்ணினார்?
அவர் உன் விசுவாசத்தை எப்படி பெலப் படுத்தியுள்ளார்?
தேவனே, நீர் எங்கள் மீது முடிவில்லாத அன்பு கொண்டுள்ள படியால், நாங்களும் உம்மையும் மற்றவர்களையும் அன்புகூர எங்களுக்கு உதவியருளும்.