ரேவன்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள அகதிகள் முகாமில் எஞ்சியிரு ந்த மக்களிடையே இந்த ஜெபம் மிகவும் குறுகிப் போய்விட்டது என்று விடுதலையாளர்கள் கண்டார்கள், அங்கு ஏறத்தாள 50,000 பெண்களை நாசிக் படையினர் கொன்று விட்டனர். “ஓ, தேவனே, நல்லெண்ணம் கொண்ட ஆண்களையும் பெண்களையும் மட்டுமல்ல, கெட்ட எண்ணம் கொண்டவர்களையும் நினைத்தருளும். அவர்கள் எங்கள் மீது சுமத்தியுள்ள வேதனைகளை நினையாதிரும். நாங்கள் கனிகொடுக்க உதவிய இத்துன்பங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம், எங்கள் கனிகளை நினைத்தருளும் – எங்களின் நட்புணர்வு, எங்களின் உண்மை, தாழ்மை, தைரியம், பெருந்தன்மை, மேன்மை பொருந்திய இருதயம் ஆகியவற்றை இவற்றின் வழியாக நாங்கள் பெற்றுள்ளோம். அவர்களை நீர் நியாயம் தீர்க்க வரும்போது, நாங்கள் இவர்களின் மூலம் பெற்ற கனிகள் இவர்களின் மன்னிப்பிற்கு காரணமாயிருப்பதாக” என்று ஜெபித்தனர்.
இந்த ஜெபத்தை எழுதிய, தீவிரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளான இப்பெண்ணுக்குள் இருந்த பயத்தையும், வேதனையையும் என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. அவளுக்குள் இருந்து விவரிக்க முடியாத கிருபை நிறைந்த வார்த்தைகள் எப்படி வெளியாக முடிகிறது என்பதையும் கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. அவள் நினைத்துப் பார்க்க முடியாததைச் செய்தாள், அவள் தன்னைக் கொடுமை படுத்தியவர்களும் தேவனின் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினாள்.
இந்த ஜெபம் கிறிஸ்து ஏறெடுத்த ஜெபத்தை பிரதிபலிக்கின்றது. தவறான குற்றச் சாட்டுகளை இயேசுவின் மீது திணித்து, கேலி செய்து, அடித்து, ஜனங்களுக்கு முன்பாக அவமானப் படுத்தி, “வேறே இரண்டு குற்றவாளிகளோடு………. அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்” (லூக். 23:32). கோரமான ஒரு மரச் சிலுவையில், உடல் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் தொங்கியவராய், மூச்சு விட திணறிய வேளையில், தன்னை துன்பப் படுத்தியவகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கலாம், அவர்களைப் பழிவாங்க அல்லது நியாயத்தீர்ப்பு வழங்க தீர்மானித்திருக்கலாம். ஆனால் இயேசு மனித குணங்களையெல்லாவற்றிற்கும் மாறாக ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (வச. 34).
தேவன் அருளிய மன்னிப்பு நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதது, ஆனால் இயேசு அதனை நமக்குத் தந்தார், அவருடைய தெய்வீக கிருபை யாராலும் தரமுடியாத மன்னிப்பை இலவசமாகக் கொட்டுகிறது.
தேவன் தந்துள்ள, நினைத்துப்பார்க்க முடியாத மன்னிப்பு உன்னை எவ்வாறு மாற்றியது? மற்றவர்களும் தேவன் தரும் உண்மையான மன்னிப்பை பெற்றுக் கொள்ள எப்படி உதவி செய்யலாம்?
தேவனே, நீர் தரும் மன்னிப்பு என்னால் புரிந்துகொள்ள முடியாததும் நினைத்துப் பார்க்க முடியாததுமாக உள்ளது. எங்களின் வேதனையின் மத்தியில் இது எவ்வாறு நடக்கின்றது என்று தெரியவில்லை, உம்முடைய அன்பினை புரிந்து கொள்ள எங்களுக்கு உதவியருளும்.