என்னுடைய ஆகாய விமானம் நிற்பதற்கு சற்று முன்பு, விமானப் பணியாளர் முதல் வகுப்பைப் பிரிக்கும் திரையை நீக்கினார், நான் விமானங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே இருந்த மிகப் பெரிய வேறுபாட்டை ஆச்சரியத்துடன் பார்த்தேன். முதல் வகுப்பில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள், அதிக காப்பீட்டுத் தொகையோடு கூடிய வசதியான இருக்கைகளையும், சற்று அகலமான கால்களை வைத்துக் கொள்ளும் இடைவெளியையும், தனிப்பட்ட சேவை வசதியையும் அநுபவிக்கின்றனர். அந்த அதிகப்படியான வசதிகளிலிருந்து நான் பிரிக்கப் பட்டிருக்கின்றேன் என்பதை அந்த திரை காண்பித்தது. வெவ்வேறு கூட்ட மக்களிடையே பிரத்தியேக பாகுபாடு காண்பித்தலை சரித்திரத்தில் அநேக இடங்களில் காண்கின்றோம். எருசலேமின் தேவாலயத்திலும் அத்தகைய ஒரு பாகுபாட்டைக் காணமுடிகின்றது, அது ஒருவரின் கொடுக்கும் திறனைச் சார்ந்ததல்ல. யூதர்கள் அல்லாத ஜனங்கள், ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் தான் ஆராதிக்க அனுமதிக்கப் படுகின்றனர். இதற்கு அடுத்து வருவது பெண்களுக்கான பிரகாரம், அதில் மிக அருகில் இருப்பது ஆண்களுக்கான பகுதி. கடைசியாக மகா பரிசுத்த ஸ்தலம் என்றழைக்கப்படும் இடம், தேவன் தம்மை எப்பொழுதாகிலும் வெளிப்படுத்தும் இப்பகுதி ஒரு திரையினால் மறைக்கப்பட்டிருக்கும், இப்பகுதியினுள் அபிஷேகிக்கப் பட்ட ஆசாரியர்கள் மட்டும் ஆண்டிற்கு ஒரு முறை செல்வர் (எபி. 9:1-10).
ஆனால் இதில் ஆச்சரியம் என்னவெனில், இந்த பிரிவினைகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தேவனைச் சேரும்படி தேடுபவர்களுக்கு இடையூறாக இருக்கும் எந்த தடையையும் இயேசு முற்றிலுமாக அகற்றினார் – நம்முடைய பாவங்களையும் நீக்கினார் (10:17). கிறிஸ்து மரித்தபோது தேவாலயத்தின் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தது போல (மத். 27:50-51), சிலுவையில் அறையப்பட்ட அவருடைய சரீரத்தின் மூலம், தேவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள தடையை கிழித்தெரிந்தார். எந்த ஒரு தடையும் உயிரோடிருக்கும் நம்முடைய தேவனின் அன்பையும், மகிமையையும், விசுவாசிகள் அநுபவிக்கக் கூடாதபடிக்கு பிரிக்கவில்லை.
கிறிஸ்துவின் மரணம், நாம் தேவனை அணுகக்கூடிய வழியைத் தருகின்றது என்ற உண்மை, நீ ஜெபிக்கும் போதும் ஆராதிக்கும் போதும் எப்படி நம்பிக்கையைத் தருகின்றது? அவருடைய விசுவாசிகளான நாம், அவருடைய மரணத்தின் மூலம் வேறெதையெல்லாம் பெற்றுக் கொள்கின்றோம்?
இயேசுவே, தேவனை அணுக வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்தவர்களுக்காக, மனப்பூர்வமாக மரித்ததின் மூலம் ஒரு வழியைத் திறந்தபடியால் உமக்கு நன்றி கூறுகின்றேன்.