பால் ஆர்னால்ட் லண்டன் பிபிசி (BBC) வானொலி நிலையத்தில், முதன் முறையாகச் சேர்ந்த போது, அவருடைய முதல் வேலை, ரேடியோ நாடகங்கள் ஒலி பரப்பப் படும் போது, “நடக்கும் ஒலியை” ஏற்படுத்துவதாகும். நடிகர்கள் நடப்பது போன்ற காட்சிகள் வரும் போது, அவர்கள் தங்களுடைய வசனங்களை வாசிக்கும் போது, மேடை மேலாளரான பால், அதற்குத் தகுந்த, நடக்கும் ஒலியைத் தன்னுடைய பாதங்களைக் கொண்டு ஏற்படுத்துவார். நடிகரின் பேச்சுக்கும், வாசிக்கும் வரிகளுக்கும் ஏற்றாற் போல், தன்னுடைய ஒலியைக் கொடுப்பார். இதிலுள்ள சவால் என்னவெனின், அந்த கதையில் வரும் நடிகனோடு ஒத்துப் போக வேண்டும், எனவே, “நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்வோம்” என்றார்.
இத்தகைய ஒரு தெய்வீக ஒன்றிணைப்பைப் பற்றி சங்கீதக்காரன் சங்கீதம் 119ல் கூறுவதைக் காண்கின்றோம். இது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றாற் போல் ஒத்து வாழ்தலை வலியுறுத்துகின்றது. “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள் என சங்கீதம் 119:1 கூறுகின்றது. தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழி நடக்கும் போது, நாம் நம்முடைய வழிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.(வ.9) நமக்குள்ளே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளாமலும் (வச. 23), பொருளாசைக்குத் தப்பிக்கொள்ளவும் (வச. 36), பாவத்திற்கு எதிர்த்து நிற்கவும் (வச. 61), தேவனுக்கு பயப்படுகின்ற நண்பர்களைப் பெற்றுக்கொள்ளவும் (வ.63), மகிழ்ச்சியோடு வாழவும் (வச. 111) முடியும்.
வேத அறிஞர் சார்ல்ஸ் பிரிட்ஜஸ் வசனம் 133 ஐக் குறித்து விளக்கம் அளிக்கும் போது, “நான், இவ்வுலகில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், இது தேவனுடைய வார்த்தையின் படி உள்ளதா, நான் கிறிஸ்துவை மாதிரியாகக் காட்டுகின்றேனா?” என்பதாகக் கேட்கும்படி கூறுகிறார்.
இவ்வாறு நாம் நடக்கும் போது, இவ்வுலகிற்கு நாம் இயேசுவைக் காட்டுகிறோம். நாம் அவரோடு நெருங்கி நடக்கும் போது, நம்மைக் காண்கின்ற மக்கள், நம்மில் தலைவராக, நண்பராக, இரட்சகராக, இயேசுவைக் காண தேவன் நமக்கு உதவுவாராக.
நீ தேவனோடு எவ்வளவு நெருங்கி நடக்கின்றாய்? இக்கேள்விக்கான பதிலை சங்கீதம் 119 ல் காணும் போது, தேவனை இன்னும் நெருங்கி பின்பற்ற, ஒரு கருத்து வசனத்தைத் தேடி வைத்துக் கொண்டு, அதன்படி வாழ். இதன் மூலம் என்ன நன்மைகளைப் பெற்றுக் கொள்வாய்?
அன்புள்ள தேவனே, வேதத்தில் காணப்படும் ஞானத்தின் படி என் நடைகளை காத்தருளும், உம்மைப் போல நடக்க எனக்கு உதவியருளும்.