“பெபட்டாவின் விருந்து” என்ற டேனிஷ் திரைப் படத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் அகதி, ஜெர்மனி தேசத்திலுள்ள ஒரு கடற்கரை கிராமத்திற்கு வருகின்றாள். அங்குள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தலைவர்களாகச் செயல்பட்ட இரு வயதான சகோதரிகளிடம் வந்து அடைக்கலம் புகுகின்றாள். பதினான்கு ஆண்டுகள், பெபட்டா அந்தச் சகோதரிகளின் வீட்டு வேலைகளை கவனிக்கின்றாள். இதன் மூலம் அவள் அதிகமான தொகையைச் சேகரித்து வைத்திருந்தாள். அவள், பிரான்ஸ் நாட்டினரின் உயர்தர உணவு விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி, அங்குள்ள சபை அங்கத்தினர்கள் பன்னிரண்டு பேரையும் அழைத்தாள்.
ஒரு வகை உணவிலிருந்து அடுத்ததிற்குச் செல்லும் இடைவெளியில், சிலர் ஓய்வு எடுத்துக் கொண்டனர், சிலர் மன்னிப்பை பெற்றுக்கொண்டனர், சிலர் தாங்கள் இழந்த அன்பை திரும்ப பெற்றுக்கொண்டனர், சிலர் தாங்கள் பெற்ற அற்புதங்களையும், சிறுவயதில் கற்றுக்கொண்ட உண்மைகளையும் பிறரோடு பகிர்ந்து கொண்டனர். “நாம் கற்றுக்கொண்டவைகளை நினைக்கின்றோமா?” என்று கேட்டுக் கொண்டனர். சிறு குழந்தைகள், ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள் என்று தங்களுக்குச் சொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தனர். அந்த சாப்பாடு முடிந்த போது, பெபட்டா, அந்த சகோதரிகளிடம், தன்னுடைய சேமிப்பு அனைத்தையும் இந்த உணவிற்கு செலவழித்து விட்டதாகத் தெரிவித்தாள். அவள் எல்லாவற்றையும், மீண்டும், பாரீஸிசின் புகழ் பெற்ற சமையற்காரியாகும் வாய்ப்பையும் விட்டுக் கொடுத்தாள். அவளோடு உணவருந்திய நண்பர்களின் உள்ளத்தைத் திறக்க உதவினாள்.
இயேசு, இவ்வுலகிற்கு அந்நியராகவும், ஊழியம் செய்பவராகவும் வந்தார். நம்முடைய ஆத்தும தாகத்தைத் தீர்க்க, அவர் எல்லாவற்றையும் கொடுத்தார். இயேசு தன்னுடைய உபதேசத்தைக் கேட்பவர்களிடம், உங்கள் முன்னோர்கள் வனாந்திரத்தில் திரிந்த போது, தேவன் அவர்கள் புசிப்பதற்கு காடையையும், மன்னாவையும் புசிக்கக் கொடுத்தார் (யாத். 16). அந்த உணவு அவர்களுக்கு கொஞ்சக் காலம் மட்டுமே திருப்தியைக் கொடுத்தது. இயேசுவை “வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்” என்று ஏற்றுக் கொள்கிறவன் “என்றென்றைக்கும் பிழைப்பான்” (யோவா. 6:51). அவருடைய தியாகம் நம்முடைய ஆத்ம தாகத்தைத் தீர்க்கும்.
உன்னுடைய பசியை, தேவன் எவ்வாறு திருப்தியாக்குகின்றார்? தியாகத்தோடு கொடுத்தல் என்பது உனக்கு எப்படித் தோன்றுகின்றது?
இயேசு, அவருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகக் கொடுத்ததன் மூலம் நாம் என்றென்றும் அவரோடு வாழும்படியான புதிய வாழ்வைப் பெற்றுக்கொண்டோம்.