முதன்முறையாக எங்கள் வீட்டினுள் நுழை ந்த வெளவாலை எப்படியோ வெளியேற்றி விட்டோம். ஆனால் அது, மீண்டும் இரவு நேரத்தில் வந்த போது, நான் அந்த உயிரினத்தைப் பற்றிய செய்திகளை வாசித்தேன். அவை மனிதர்கள் வாழும் இடத்தினுள் நுழைவதற்கு, ஒரு சிறிய காசு அளவு துளையிருந்தாலும் போதும், அதன் வழியாக நுழைந்து விடும் எனத் தெரிந்து கொண்டேன். எனவே நான், சிறிய துளைகளை அடைக்க உதவும் என்னுடைய காக் வகை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, வீட்டைச்சுற்றி வந்து, எல்லா சிறிய திறப்புகளையும் அடைத்தேன்.
உன்னதப்பாட்டு 2:15ல், சாலமோன் மற்றுமொரு தொல்லை தரும் உயிரினத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார். இங்கு, அவர் திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கும் “சிறு நரிகளை”ப்பற்றி குறிப்பிடுகின்றார். நம் வாழ்க்கையினுள் நுழைந்து, உறவுகளைக் கெடுக்கும் அபாயங்களைக் குறித்து, இதனை அடையாளமாகச் சொல்கின்றார். வெளவால் விரும்பிகளையும், நரி ரசிகர்களையும் புண்படுத்துவதற்காக நான் இதனைச் சொல்லவில்லை. வெளவால்களையும், நரிகளையும் வீட்டைவிட்டு துரத்துவது என்பது, பாவத்தை நம் வாழ்வை விட்டு துரத்துவதற்குச் சமம் என்கின்றார் (எபே. 5:3). தேவனுடைய கிருபையினாலும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே கிரியை செய்கிறபடியினாலும் நாம், “மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின் படி நடக்கிறதற்கு” (ரோம. 8:4) பெலனளிக்கிறார். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நாம் பாவத்திற்கு எதிர்த்து நிற்க முடியும்.
இப்பொழுது நாம் “கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறோம் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்வோம்’’ (எபே. 5:8-10) ஆவியானவர் சிறு நரிகளைப் பிடிக்க நமக்கு உதவிசெய்கின்றார்.
நீ பாவம் செய்யும் படி தூண்டப்படும் போது, அதை மேற்கொள்ள, எப்படி ஆவியானவரைச் சார்ந்து கொள்வாய்? இன்றைக்கு எந்த சிறு நரிகளைப் பிடிக்க ஆவியானவரின் உதவி உனக்குத் தேவை?
தேவனே, என்னுடைய பெலவீனங்களையெல்லாம் நீர் அறிவீர். தயவாய், நான், உம்மோடும், மற்றவர்களோடும் வைத்துள்ள உறவினைக் கெடுக்கின்ற பாவங்களை மேற்கொள்ள, உமது வல்லமையைத் தந்து என்னை பெலப்படுத்தியருளும்.