என்னுடைய குழந்தைகளோடு நடைபயிற்சி சென்றபோது ஒரு மெல்லிய, சுருள் சுருளாய் அமைந்த பச்சை நிறத் தாவரம் சிறு, சிறு கூட்டமாக நடைபாதையில் வளர்ந்திருக்கக் கண்டேன். அங்கிருந்த ஒரு பெயர் பலகையிலிருந்து அந்தத் தாவரத்தின் பெயர் மான் பாசி எனத் தெரிந்து கொண்டேன். ஆனால், உண்மையில் அவை பாசியினம் அல்ல. இது மரத்திலும், பாறைகளிலும் படரக்கூடிய ஒரு வகைத் தாவரம். லிச்சென் எனப்படும். லிச்சென் என்பது பூஞ்சையும், கடல் பாசியும் இணைந்து ஒன்றுக்கொண்டு துணையாக வளரும் பண்வினை பெற்றது. இதிலுள்ள ஒவ்வொரு தாவர வகையும் மற்றதிலிருந்து பயனைப் பெற்றுக் கொள்ளும். இந்தப் பூஞ்சையும் பாசியும் தனித்து வளரக் கூடியது இல்ல. ஆனால், அவை இணைந்து ஒரு வலிமையான தாவரமாக ஆல்ப்ஸ் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை ஏறத்தாள 4500 ஆண்டுகள் உயிர் வாழக் கூடியன. ஏனெனில் இவை வறட்சியையும், குறைந்த வெப்பநிலையையும் தாங்கக் கூடியன. குளிர்காலங்களில் மான்களுக்குக் கிடைக்கக் கூடிய ஒரே வகை உணவு இந்தத்தாவரம் மட்டும் தான். பூஞ்சைகளுக்கும், பாசிகளுக்கும் உள்ள இந்த உறவு, மனித உறவை எனக்கு நினைவுபடுத்தியது. நாமும் ஒருவரையொருவர் சார்ந்தே வாழ்கின்றோம். நாம் வளர்ந்து, செழிக்கும்படி நாம் மற்றவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
கொலோசே சபை விசுவாசிகளுக்கு பவுல் எழுதும் போது நம்முடைய உறவுகள் எப்படியிருக்க வேண்டுமென்று விளக்குகின்றார். நாம் “உருக்கமான இரக்கத்தையும் தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும்” ஆடையாகத் தரித்துக்கொள்ள வேண்டும் என்கின்றார் (கொலோ 3:12). நாம் ஒருவரையொருவர் மன்னிக்கின்றவர்களாயும், சமாதானத்தோடு வாழ்பவர்களாயும் இருக்க வேண்டும். “இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்” (வச. 15) எனகி;றார்.
நாம் எப்பொழுதும் சமாதானத்தோடு நம் குடும்ப நபர்களோடும், நண்பர்களோடும் வாழ்வது எளிதான காரியமல்ல. பரிசுத்த ஆவியனவர் நம்மை பெலப்படுத்தும் போது தாழ்மையையும், மன்னிப்பையும் நம்முடைய உறவுகளில் பெறமுடியும். இவ்வாறு நாம் கிறிஸ்துவுக்கு நேராக நாம் வழி நடத்தப்படுகின்றோம் (யோவா. 13:35). தேவனுக்கும் மகிமையைக் கொண்டு வருபவர்களாயிருப்போம்.
பரிசுத்த ஆவியானவரே, எங்களை மனதுருக்கம், தயவு, தாழ்மை, சாந்தம், பொறுமை இவற்றை மற்றவர்களுக்கு காட்டுவதால், உலகம் உம் அன்பு எங்களிடம் காணப்பட நிரப்பும்.
என்னென்ன வழிகளில் உன்னுடைய உறவுகள் இயேசுவுக்கு நேராகச் செல்கின்றது? எவ்வாறு நீ சமாதானத்தை அடைய முடியும்?