நெதர்லாந்து தேசத்தினுள் பகைவர்களின் குடியேற்றம் அதிகரித்தபோது, ஆனி பிராங்கும் அவள் குடும்பமும் தப்பித்துக்கொள்ள நினைத்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, அவர்கள் ஒரு இரகசிய இடத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தனர். அவர்கள்.

கண்டுபிடிக்கப்பட்ட போது, பொதுப் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆனியின் பிரசித்திப்பெற்ற கையேட்டில் எழுதியிருந்தது, ‘நீண்ட நாட்களுக்குப் பின் எல்லா ஆயுதங்களையும் விட கூரிய ஆயுதமாகச் செயல்பட்டது சாந்தமும், அமைதலுமான ஆவியே” என்பது.

நிஜ வாழ்வில் சாந்தத்தையும், அமைதியையும் செயல்படுத்துவது என்பது சிக்கலான காரியமாகத் தோன்றலாம்.

ஏசாயா 40ல் தேவனுடைய மென்மையான மற்றும் வல்லமையான குணாதிசயத்தைக் காண்கின்றோம். வசனம் 11ல், ‘மேய்ப்பனைப் போல தமது மந்தையை மேய்ப்பார்.

ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்”  எனவும் ‘இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்” (வச. 10) எனவும் காண்கின்றோம். அவர் முழுவதும் வல்லமையுள்ளவராகவும், பாதுகாக்கவேண்டிய இடத்தில் மென்மையானவராகவும் திகழ்கின்றார்.

தேவாலயத்தில் காசுக்காரருடைய பலகைகளையும் கவிழ்த்து, விற்கிறவர்களையும், கொள்கிறவர்களையும் துரத்திவிட சவுக்கை பயன்படுத்தியபோது அதிகாரமும், வல்லமையும் உடையவராகவும், சிறுபிள்ளைகளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டபோது மென்மையானவராகவும் செயல்பட்டார். அவர் அதிகாரமுடைய வார்த்தைகளால் பரிசேயரைக் கண்டிக்கின்றார் (மத். 23). இயேசுவின் கனிவான, இரக்கமுள்ள கண்கள் ஒரு பெண்ணை மன்னிக்கின்றது (யோவா. 8:1-11).

நாமும் வல்லமையோடு உறுதியாக பலவீனருக்காக நிற்கவும், நீதியை நிலைநிறுத்த சவால்களை ஏற்கவும் வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். ‘உங்களுடைய சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக (பிலி. 4:5). நாம் தேவனுக்குப் பணி செய்யும் போது, நம்முடைய மிகப்பெரிய பெலன் தேவையுள்ளவர்களிடம் காட்டப்படும் மென்மையான இருதயத்தால் விளங்கும்.