ககடற்பயணிகள், தங்களுடைய சோகமான நிலைமையைத் தெரிவிக்க தேவையான SOS என்ற மோர்ஸ் குறியீட்டு அடையாளம், 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டு ‘ஸ்டீம் ஷிப் கென்டக்கி’ என்ற கப்பல் மூழ்கிய போது, அக்கப்பலிலிருந்த நாற்பத்தாறு பயணிகளையும் காப்பாற்ற இந்த குறியீட்டு அடையாளம் பயன்பட்டதிலிருந்து, அது பிரபல்யமடைந்தது.

SOS என்பது ஒரு சமீபகால கண்டுபிடிப்பு. ஆனால், அவசரகால உதவிக்காகக் கூப்பிடல் என்பது மனித குலம் உருவானது முதல் இருந்து வருகிறது. இத்தகைய கூப்பிடுதலை நாம் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் சரித்திரத்தில் அநேக இடங்களில் பார்க்கின்றோம். யோசுவா தன்னுடைய சொந்த இஸ்ரவேல் ஜனங்களின் எதிர்ப்பைச் சந்தித்தபோதும் (யோசு. 9:18) சவாலான வனாந்தர பிரயாணத்திலும் (3:15-17) . இஸ்ரவேலர் பதினான்கு வருடங்களுக்கும் மேலாக, தேவன் அவர்களுக்கு வாக்களித்த தேசத்தை கொஞ்சங், கொஞ்சமாகக் கைப்பற்றி சுதந்தரித்துக் கொண்ட போதும் காண்கின்றோம். இத்ததைய போராட்டங்களின் போது “கர்த்தர் யோசுவாவோடே கூட இருந்தார்” (6:27).

யோசுவா 10ல் காண்கிறபடி, இஸ்ரவேல் ஜனங்களோடு சமாதானமாயிருந்த கிபியோனியருக்குத் துணையாக இஸ்ரவேலர், அவர்களை எதிர்த்த ஐந்து ராஜாக்களுக்கும் எதிராக யுத்தம் பண்ணப் புறப்பட்டனர். யோசுவா, தங்களை எதிர்த்து வருகின்ற பெலசாலிகளான ஐந்து ராஜாக்களையும் மேற்கொள்ள தேவனுடைய உதவியைக் கேட்கின்றான் (வச. 12). கர்த்தர் வானத்திலிருந்து கல்மழையைத் கட்டளையிட்டார். இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களை முற்றிலும் அழிக்குமட்டும் கர்த்தர் சூரியனை நடுவானில் ஒரு பகல் முழுவதும் தரித்து நிற்கச் செய்தார் (யோசு. 10:14). இப்படி, “மெய்யாகவே கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார்”.

ஒரு வேளை நீயும் இத்தகைய சவால்கள் நிறைந்த சூழலிலிருக்கலாம். நீ கர்த்தருக்கு ஒரு SOS (எஸ்.ஓ.எஸ்) அனுப்பு. யோசுவா பெற்றுக் கொண்ட உதவியை விட வேறுவிதமாக உனக்கு உதவி வரும். அது ஒருவேளை நீ எதிர்பாராத ஒரு வேலையின் வழியாகயிருக்கலாம், அல்லது உன் தேவையைப்புரிந்து கொண்ட ஒரு மருத்துவராக இருக்கலாம், அல்லது கவலையின் மத்தியில் ஏற்பட்ட சமாதானமாயிருக்கலாம். இத்தகைய வழிகளில் அவர் நீ உதவிக்காகக் கூப்பிட்டதைக் கேட்டு பதிலளித்து உனக்காக யுத்தம் செய்கிறார். எனவே ஊக்கத்தோடிரு.