2010 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளியான ஒரு செய்தித் தாளில் எட்டு மூத்த குடிமக்களிடமிருந்து வெளியான வாழ்க்கைக் கல்வியைக் குறித்து சிறப்பு செய்தி வெளி வந்தது. அந்த செய்தி இவ்வாறு ஆரம்பித்தது. ‘‘முதுமை உடலுக்கும் மனதுக்கும் சவால்களைக் கொண்டு வந்த போதிலும், அது வேறு சில பகுதிகளில் விரிவுக்கு வழிவகுக்கின்றது. அங்கு அளவற்ற, உணர்வு மற்றும் சமுதாயம் சார்ந்த அறிவு இருக்கிறது; அதாவது அறிஞர்கள் ஞானம் என்று வரையறுக்கும் ஒன்றின் குணாதிசயங்கள்…. அதுவே முதியோரின் ஞானம்.”
உண்மையில் ஞானமுள்ள முதியோரிடம் வாழ்க்கையைப் பற்றி கற்றுக் கொடுக்க நிறைய இருக்கிறது. ஆனால் வேதாகமத்தில் நாம் புதிதாக முடி சூட்டப்பட்ட ஓர் அரசனைச் சந்திக்கின்றோம், அவன் இந்த ஞானத்தை கண்டு கொள்ளத் தவறிவிட்டான்.
சாலமோன் அரசன் மரித்து விட்டான். 1 இராஜாக்கள் 12:3ல் நாம் வாசிப்பது, ‘‘இஸ்ரவேல் சபையனைத்தும் வந்து ரெகொபெயாமை நோக்கி” ஒரு வேண்டுகோளை வைக்கின்றனர். அவர்கள் அந்த புதிய ராஜாவிடம், அவருடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், வரிச்சுமையையும் லேசாக்கும். அப்பொழுது அவர்கள் ரெகொபெயாமை உண்மையாய்ச் சேவிப்பதாகச் சொல்கின்றனர்.
முதலில் இந்த இளம் அரசன் முதியோரை ஆலோசிக்கின்றான் (வச. 6). ஆனால் அவர்களின் ஆலோசனையை நிராகரித்துவிட்டு, அவனோடு வளர்ந்த வாலிபர் கொடுத்த முட்டாள்தனமான ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறான். (வச. 8) அவன் ஜனங்கள் மீது இன்னும் அதிகமான பாரத்தைச் சுமத்தினான். அவனுடைய அவசர புத்தி அவனுடைய ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியை இழக்கச் செய்தது.
நம்மனைவருக்கும் அனுபவமிக்கவர்களிடமிருந்து வரும் ஆலோசனை தேவை, சிறப்பாக தேவனோடு நடந்து, அவருடைய ஆலோசனைக்குச் செவி கொடுத்தவர்களின் ஆலோசனை வேண்டும். அவர்கள் சேர்த்து வைத்துள்ள, அவர்களுக்கு தேவன் கொடுத்துள்ள ஞானத்தை நினைத்துப் பார்ப்போம். அவர்களிடம் தேவனைப் பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய அனுபவமிருக்கிறது. நாம் அவர்களைத் தேடிச் சென்று அவர்களின் ஞானத்திற்குச் செவி கொடுப்போம்.
இளமையின் தவறுகளைத் தவிர்க்க, முதியோர்களிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்.