பல சமயங்களில் தனிநபர்களை அல்லது குடும்பங்களை, உறவுமுறைகளை, நிறுவனங்களை மற்றும் அரசாங்கங்களைப் விவரிப்பதற்கு கூட செயல்பாடற்ற என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. நன்றாகப் பயன்பாட்டில் இருக்கக்கூடியதை ‘செயல்படுகிற’ என்றும், தன்னுடைய வடிவமைப்புக்கு ஏற்றவாறு செயல்பட இயலாமல் பழுதாகி இருக்கிறதை ‘செயல்பாடற்றது’ என்றும் பொருள்படும்.
அப்போஸ்தலனாகிய பவுல், ரோமருக்கு எழுதின நிருபத்தில் ஆவிக்குரிய செயல்பாடற்ற மனித குலத்தைப் பற்றி விவரித்து தன் கடிதத்தை துவங்குகிறார் (ரோம. 1:18-32). “எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை… எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,” என்று அம்முரட்டாட்டமான கூட்டத்தில் நம் அனைவருக்கும் பங்குண்டு என்பதை பவுல் விவரித்துள்ளார் (3:12,23).
நற்செய்தி என்னவெனில், “இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு…. விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறார்…” (வச. 24-25). நாம் கிறிஸ்துவை நம்முடைய வாழ்வில் வரவேற்று, தேவன் அளிக்கும் மன்னிப்பையும் புதிய வாழ்வையும் ஏற்றுக்கொண்டால், நாம் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணி தேவன் நம்மை சிருஷ்டித்தாரோ, அப்பரிபூரணத்திற்கு நேராக நாம் கடந்து செல்வோம். உடனடியாக நாம் பரிபூரணமடைந்து விட மாட்டோம் என்றாலும், இனி ஒருபோதும் நாம் மனமுடைந்தவர்களாய் நொறுங்குண்டவர்களாய் செயலற்று இருக்கத் தேவையில்லை.
சொல்லாலும் செயலாலும் நாம் தேவனைக் கனப்படுத்தும்படி தினந்தோறும் பரிசுத்த ஆவியானவரின் மூலம் பெலன் பெற்று “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை (நாம்)களைந்துபோட்டு… (நம்முடைய)உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத் தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்(வோம்)” (எபே. 4:22-24).
கிறிஸ்துவை நாம் கிட்டிச் சேரும்பொழுது தேவன் நம்மை வடிவமைத்ததற்கு ஏற்ப நாம் வாழ முடியும்.