தன் மகளுடன் தனக்கிருக்கும் பிரச்சனைகளை பகிர்ந்துகொண்ட பொழுது அவளுடைய குரல் தழுதழுத்தது. தன்னுடைய மகளின் கேள்விக்குரிய நண்பர்களை குறித்து கவலையுற்ற இத்தாய் அவளுடைய கைப்பேசியை பறித்துக்கொண்டு தன் மகள் செல்லும் இடமெங்கும் அவளுடைய மெய்க்காப்பாளர் போல கூடவே சென்றாள். இதனால் அவர்களுடைய உறவில் மேலும் விரிசல் அதிகமாகவே செய்தது.
நான் அப்பெண்ணின் மகளிடம் பேசிய பொழுது, அவள் தன் தாயாரை அதிகமாய் நேசிக்கிறாள் என்பதை அறிந்துகொண்டேன். ஆனால் தன் தாயாருடைய அதீக அன்பினால் மூச்சுத்திணறிக் கொண்டிருந்தபடியால், அத்தாயாரின் பிடியிலிருந்து வெளியேறவே விரும்பினாள்.
குறைவுள்ளவர்களாகிய நாம் அனைவரும் நம்முடைய உறவுகளில் போராடுகிறோம். நாம் பெற்றோராக இருப்பினும் பிள்ளையாக இருப்பினும், திருமணம் ஆனவரோ ஆகாதவரோ, யாராயிருப்பினும், நம்முடைய அன்பை சரியான விதத்திலே வெளிப்படுத்த போராடுகிறோம், சரியானதை சரியான நேரத்திலே கூறவும், செய்யவும் கூட போராடுகிறோம். நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் அன்பிலே வளர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.
1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்திலே பவுல் பூரணமான அன்பு எப்படி காணப்படும் என சுருக்கமாகக் கூறுகிறார். பரிபூரண அன்பின் தரநிலையை கேட்பதற்கு அற்புதமாகத்தான் உள்ளது. ஆனால், அவ்வன்பை கடைப்பிடிப்பது முற்றிலும் சவாலான காரியம். ஆனால் நல்லவேளை, இயேசு நமக்கு மாதிரியாக உள்ளார். அவர் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தேவைகளோடு வந்த மக்களிடம் பழகிய விதம், பரிபூரண அன்பு செயலில் எப்படி காணப்படும் என்பதை நமக்கு காண்பித்துள்ளார். நாம் நம்மை அவருடைய அன்பில் நிலைநாட்டி, நம் மனதை அவருடைய வார்த்தையில் மூழ்கச்செய்து அவரோடு கூட நடப்போமானால், அவருடைய சாயலை நாம் அதிகதிகமாக பிரதிபலிப்போம். இருப்பினும் நாம் தவறுகள் செய்யக்கூடும். ஆனால் அவற்றையெல்லாம் சரிசெய்து எல்லா நிலையிலும் நன்மையைக் காணச்செய்வார். ஏனெனில், அவருடைய அன்பு “சகலத்தையும் தாங்கும், ” (வச. 7) “அது ஒருக்காலும் ஒழியாது” (வச. 8).
தம்முடைய அன்பைக் காண்பிக்க, நமக்காக இயேசு மரித்தார்; நாம் நம்முடைய அன்பைக் காண்பிக்க அவருக்காகவே வாழ்வோமாக!