சார்ல்ஸ் லோயரி (Charles Lowery) தன் முதுகின் கீழ் பகுதியிலுள்ள வலியைக் குறித்து தன்னுடைய நண்பனிடம் முறையிட்டான். அனுதாபத்தை எதிர்பார்த்த அவனுக்கு அதற்கு மாறாக நேர்மையான ஒரு பதில் கிடைத்தது. “உன் பிரச்சனை முதுகு வலியாக எனக்கு தோன்றவில்லை. உன்னுடைய பிரச்சனை உன் வயிறு. ஏனெனில் அது பெரிதாக இருப்பதால், உன் பின் பகுதியில் அழுத்தம் தருகிறது,” என்று அவன் நண்பன் கூறினான்.
புண்படக்கூடிய மனநிலைக்கு தான் செல்லாதபடி தன்னைக் காத்துக் கொண்டதாக ரெவ் (Rev) பத்திரிக்கையில் தன்னுடைய பகுதியில் இதை சார்லஸ் பகிர்ந்து கொண்டார். பின்பு, எடையை குறைத்ததும் அவருடைய வலி பறந்தோடியது. “மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” (நீதி. 27:5-6) என்பதை சார்லஸ் அறிந்துகொண்டார்.
பிரச்சனை என்னவெனில், நாம் அநேகந்தரம் விமர்சனங்களால் தப்பித்துக் கொள்வதைக் காட்டிலும், துதியினால் வீழ்ச்சியடைவதையே விரும்புகிறோம். ஏனென்றால் உண்மை வலிக்கும். “நான்” என்னும் சுயத்தை அது காயப்படுத்துகிறது, சங்கடப்படுத்துகிறது. ஆனால் ஒரு நல் மாற்றத்தை முன்வைக்கிறது.
உண்மையான நண்பர்கள் நம்மை காயப்படுத்தி சந்தோஷமடைய மாட்டார்கள். மாறாக, நம்மை ஏமாற்றக் கூடியவர்களாய் இல்லாமல் மிகுந்த அன்பு செலுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். நம் குறையை அறிந்தும், அதனை ஏற்று, மாற்றிக்கொள்ளாமல் இருக்கும் காரியத்தை கூட அவர்கள் தைரியத்தோடும், அன்போடும் சுட்டிக் காண்பிப்பார்கள். நாம் கேட்க நினைப்பதை மட்டுமில்லாமல், நாம் கேட்க வேண்டிய காரியங்களையும் நமக்கு தெரிவிப்பார்கள்.
அப்படிப்பட்ட தோழமைகளை சாலமோன் கனப்படுத்துவதை நீதிமொழிகள் புத்தகத்திலே காணலாம். இயேசு இதையும் தாண்டி நம்மை உணர்த்துவதோடு, நாம் எவ்வளவாய் நேசிக்கப்படுகிறோம் என்பதையும் அறிந்துக்கொள்ள, அவரை நிராகரித்து நாம் ஏற்படுத்திய காயங்களை அவரே சுமந்து கொண்டார்.
உண்மையை அன்போடு கூறுபவன் நண்பன்.