கானாவில் நான் சிறுவனாக ஓர் ஒதுக்குப்புறமான பகுதியில் வாழ்ந்து வந்தேன். அங்கு வாழ்ந்து வந்த மக்கள் மத்தியில் “உணவு வேளை, சிநேகிதர்கள் வரவேண்டாம்” என்ற முதுமொழி மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏனென்றால் அங்கு உணவு கிடைப்பதில் மிகவும் கஷ்டமான காலமது. ஆகவே உணவு உண்ணும் வேளையில் ஒருவரது வீட்டிற்குச் செல்வது மரியாதை அற்ற செயல் என்று கருதினார்கள். அந்த முதுமொழி அயலகத்தாருக்கும், அந்நியருக்கும் பொருந்தும்.

சிறிதுகாலம் நான் பிலிப்பைன்ஸிலும் வாழ்ந்து வந்தேன். அங்கு உணவு வேளையில், முன்னறிவிப்பு எதுவுமின்றி நீங்கள் சென்றுவிட்டாலும், விருந்தளிப்பவருக்கு போதுமான அளவு உணவு இல்லாதபொழுதும், அவர்களுக்குள்ள உணவை நீங்களும் பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்தபடுவீர்கள். சில காரணங்களால் கலாச்சாரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.

இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டபொழுது, அவர்களது கலாச்சாரத்தை காத்துக்கொள்வதற்காக தேவன் சில சிறப்பான கட்டளைகளைக் கொடுத்தார். ஆனால் கட்டளைகள் – தேவனுடைய கட்டளைகளாக இருந்தாலும், மனிதர்களது உள்ளத்தை ஒருக்காலும் மாற்ற இயலாது. ஆகவே மோசே, “உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்” (உபா. 10:16) என்று கூறினார். அந்த சவாலை மோசே, இஸ்ரவேல் மக்களின் முன்வைத்தவுடன், அவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த அந்நிய தேசத்தாரை அவர்கள் நடத்தி வந்த விதத்தைப்பற்றிக் கூறினார். “அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரை சிநேகிப்பீர்களாக” (உபா. 10:18–19) என்று கூறினார்.

இஸ்ரவேல் மக்கள் “தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமான” (உபா. 10:17) தேவனை சேவித்து வந்தார்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த இஸ்ரவேலரின் கலாச்சாரத்திற்கு வேறு அந்நியர்களை நேசிப்பதின் மூலம் மட்டும் தேவனோடு அவர்களுக்குள்ள உறவை வெளிக்காண்பிக்க வேண்டும்.

தேவனுடைய இந்த குணாதிசயத்தை சித்தரிக்கும் இந்தக்காரியம், இன்று நமக்கு என்ன கற்பிக்கிறது? நமது உலகில் ஒதுக்கப்பட்டவர்கள், தேவை உள்ளவர்களுக்கு நாம் தேவனுடைய அன்பை எவ்வாறு காண்பிக்க முடியும்?