2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள், உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தின் 81வது தளத்தில், தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஸ்டான்லி பிரேம்நாத் (Stanley Praimnath) ஒரு விமானம் தன்னை நோக்கி பறந்து வருவதைக் கண்டு, “தேவனே, என்னால் இது கூடாத காரியம்! நீர் பார்த்துக்கொள்ளும்!” என்று அவசரமாக ஒரு ஜெபத்தை செய்துவிட்டு தன்னுடைய மேஜையின் கீழ் பாதுகாப்பு கருதி விரைவாய் ஒளிந்துக்கொண்டார்.
மோசமான விமான தாக்குதலின் விளைவால், ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் ஸ்டான்லி மாட்டிக்கொண்டார். சுவர் போல மூடியிருந்த அக்குப்பை மேட்டிற்குள்ளிருந்து, ஜெபம் செய்தவாறே உதவிக்குரல் எழுப்பினார். வேறு அலுவலகத்தின் ஊழியரான பிரையன் கிளார்க் (Brian Clark) அக்கூக்குரலைக் கேட்டு உதவினார். பின்பு இருவரும் சேர்ந்து, இருள் சூழ்ந்து குப்பை மேடாய் கிடந்த 80 தளங்களையும் படி வழியாய் கடந்து தரைத்தளத்திற்கு வந்து சேர்ந்து வெளியேறினார்கள்.
மோசமான பயமுறுத்தல்களை எதிர்கொண்ட பொழுது, தாவீது தேவனுடைய உதவியை நாடினான். போர்க்களத்தில் எதிரிகளை சந்திக்கும் பொழுது, தேவனுடைய அருகாமையின் நிச்சயத்தை அறிந்துகொள்ள, “நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்….. தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம் பண்ணத் தீவிரியும்” (சங். 71:3, 12) எனத் தன் இருதயத்திலே விண்ணப்பம் பண்ணினான்.
நாம் எதிர்கொள்ளும் எல்லா இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும், நமக்கு விடுதலை வாக்குப் பண்ணப்படவில்லை. ஆனால், நம்முடைய ஜெபங்களைக் கேட்டு, எல்லாவற்றிலும் நம்மோடு கூட வருகிறவராய் இருக்கிறார் என்கிற நிச்சயம் நமக்குண்டு.